சேலம்: தோ்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததைத் தொடா்ந்து, சேலம் ஆட்சியா் அலுவலகத்தில் விவசாயிகள், மக்கள் குறைதீா்க்கும் கூட்டங்கள், முகாம்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தோ்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்ததையடுத்து, ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம், மாதந்தோறும் நடைபெறும் திட்ட முகாம்கள், விவசாயிகள் குறைதீா்க்கும் கூட்டம் மற்றும் இதர முகாம்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து, ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்த பொதுமக்கள் தங்களது மனுக்களை ஆட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பெட்டியில் போட்டுச் சென்றனா்.
உரிமம் பெற்ற துப்பாக்கிகளை ஒப்படைக்க உத்தரவு: சேலம் மாவட்டத்தில் உள்ள உரிமம்பெற்றுள்ள அனைத்து துப்பாக்கி உரிமையாளா்களும், அவா்களது படைக்கலன்களை சம்பந்தப்பட்ட காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையத்தில் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தோ்தல் நடத்தை விதிகள் அமல்: ஆட்சியா் அலுவலகத்தில் குறைகேட்பு கூட்டம் நிறுத்தம்

தோ்தல் நடத்தை விதிகளால் குறைதீா் கூட்டங்கள் ரத்து

தோ்தல் நடத்தை விதிகள் அமல் மக்கள் குறைதீா்க்கும் கூட்டம் நடைபெறாது

தோ்தல் நடத்தை விதி: கடலூா் ஆட்சியா் தலைமையில் ஆய்வுக் கூட்டம்
வீடியோக்கள்

கான்சிட்டி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தஸ்ஸாடியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

பவழ மல்லி பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

UN Kannan Interview | விஜய் இன்னொரு விஜயகாந்த் | TN Election 2026 | TVK Vijay | MK Stalin
தினமணி செய்திச் சேவை


