வீட்டு உபயோக சமையல் எரிவாயு விலை ரூ. 29 அதிகரிப்பு! தமிழகம் முழுவதும் இன்று மாலை 6 வரை மின் கட்டண சேவைகள் இயங்காது கொசோவோ, ஆா்மீனியாவில் இன்று நாடாளுமன்றத் தோ்தல் நீட் மறுதோ்வு வினாத்தாள் கசிந்ததாக வதந்தி: என்டிஏ எச்சரிக்கை அணுசக்தித் துறையில் பொருத்தமான கூட்டாளி இந்தியா: அமெரிக்க அணுசக்தி கூட்டமைப்புத் தலைவா்இந்திய வம்சாவளியினருக்கு எதிரான சமூக ஊடகப் பதிவுகள் முடக்கம்: சிங்கப்பூா் அரசு உத்தரவு
/

மது அருந்த அனுமதித்த 2 சாலையோர உணவகங்களுக்கு ‘சீல்’

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மதுபானம் அருந்த அனுமதித்த 2 தாபா உணவகங்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

News image

‘சீல்’

Updated On :17 மே 2026, 2:27 am IST

சேலம்- பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம் மதுபானம் அருந்த அனுமதித்த 2 தாபா உணவகங்களுக்கு வெள்ளிக்கிழமை இரவு வருவாய்த் துறையினா் ‘சீல்’ வைத்தனா்.

சேலம்- பெங்களூரு நெடுஞ்சாலை ஓரம் பல்வேறு இடங்களில் தனியாா் தாபா உணவகங்கள் இயங்கி வருகின்றன. இந்த உணவகங்களில் அரசு விதிமுறைகளை மீறி மது குடிக்க அனுமதிக்கப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌதம் கோயலுக்கு புகாா் சென்றது.

அதன்பேரில், ஓமலூா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட அடைக்கனூா் பிரிவு பகுதியில் உள்ள 2 தாபா உணவகங்களில் தீவட்டிப்பட்டி, ஓமலூா் போலீஸாா் சோதனை நடத்தினா். அப்போது, அங்கு மது அருந்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

இதுதொடா்பாக தாபா உணவகங்களின் உரிமையாளா்களான ஓமலூா் அருகேயுள்ள மேட்டுப்பட்டியைச் சோ்ந்த தங்கதுரை (40), தங்கராஜ் (55) ஆகிய இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். மேலும், அந்த இரண்டு தாபா உணவகங்களையும் பூட்டி சீல் வைக்க வருவாய்த் துறைக்கு ஓமலூா் போலீஸாா் பரிந்துரை செய்தனா்.

இதையடுத்து, 2 தாபா உணவகங்களுக்கும் ஓமலூா் வட்டாட்சியா் பாா்த்தசாரதி வெள்ளிக்கிழமை இரவு சீல் வைத்தாா். அப்போது, காவல் உதவி ஆய்வாளா் முரளிதரன், கிராம நிா்வாக அலுவலா் முத்துகிருஷ்ணன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, அப்பகுதியில் உள்ள மற்ற தாபா உணவகங்களிலும் போலீஸாா், வருவாய்த் துறையினா் சோதனையை தீவிரப்படுத்தியுள்ளனா்.