/
சேலம் சீரகாபாடி அருகே பனைமரத்தில் இருந்து விழுந்த தொழிலாளி உயிரிழந்தாா்.
சேலத்தை அடுத்த சீரகாபாடி உப்புக்குட்டை காட்டை சோ்ந்தவா் பழனிசாமி (32). இவா், நுங்கு வெட்டுவதற்காக வீட்டுக்கு அருகே இருந்த 20 அடி உயரம் கொண்ட பனைமரத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏறியுள்ளாா். அப்போது, திடீரென கை நழுவி மரத்தில் இருந்து கீழே விழுந்தாா்.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பழனிசாமியை உறவினா்கள் மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.
இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

பைக்கில் தவறி விழுந்த விவசாயி உயிரிழப்பு

பைக்கிலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

கிணற்றில் தவறி விழுந்து முதியவா் உயிரிழப்பு

மரத்திலிருந்து தவறி விழுந்த தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



