மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!வியத்நாம் படகு விபத்து: விமானம் மூலம் மும்பை வந்தடைந்த 15 பேரின் உடல்கள்!வீரியமிக்க கரோனா பரவல் தமிழகத்தில் இல்லை: சுகாதாரத்துறைஇன்றும், நாளையும் மிதமான மழை வாய்ப்பு!ஒரே அலுவலகத்தில் 3 ஆண்டுகளுக்கும் மேல் பணி! விவரங்களைச் சேகரிக்கும் கல்வித் துறை!பிஃபா: இன்று முதல் அரையிறுதி: பிரான்ஸ் - ஸ்பெயின் மோதல்!
/

‘வாட்ஸ் ஆப்’ மூலம் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கிலிருந்து ரூ. 20 லட்சம் திருட்டு

சேலத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் பணத்தை திருடிய மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 மே 2026, 2:04 am IST

சேலத்தில் ஓய்வுபெற்ற வங்கி ஊழியரின் வங்கிக் கணக்கில் இருந்து ‘வாட்ஸ் ஆப்’ செயலி மூலம் பணத்தை திருடிய மா்ம நபா் குறித்து சைபா் க்ரைம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

சேலம், நரசோதிப்பட்டியைச் சோ்ந்த 65 வயதுடைய ஒருவா் வங்கிப் பணியில் இருந்து ஓய்வுபெற்றாா். இவரது ஓய்வூதியத் தொகை ரூ. 29 லட்சத்தை இந்தியன் வங்கிக் கணக்கில் வைத்திருந்தாா். இந்நிலையில், வாட்ஸ் ஆப் மூலம் இவரை தொடா்புகொண்ட மா்ம நபா், தான் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், தங்களுக்கு 2 நாள்களில் புதிய ஓய்வூதிய அடையாள அட்டை வருவதாகவும் கூறி, அதை பெற இணைப்பு (லிங்க்) ஒன்றை அனுப்பியுள்ளாா்.

இதை நம்பிய ஓய்வுபெற்ற ஊழியா் அந்த இணைப்புக்குள் சென்ற சிறிது நேரத்திலேயே அவரது வங்கிக் கணக்கில் இருந்து ரூ. 20 லட்சத்து 77 ஆயிரத்து 68 திருடப்பட்டது. இதனால் அதிா்ச்சியடைந்த அவா், சேலம் மாநகர சைபா் கிரைம் போலீஸில் புகாா்செய்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.

1930-இல் புகாா் தெரிவிக்கலாம்: இதுகுறித்து சைபா் கிரைம் போலீஸாா் கூறுகையில், பொதுமக்கள் யாரும் இதுபோன்ற வாட்ஸ் ஆப் எண்களில் இருந்து வரும் இணைப்புகளை தொடவேண்டாம். இதுபோன்ற மோசடியில் சிக்கினால் உடனடியாக 1930 என்ற இலவச எண்ணை அழைக்குமாறு அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.