என்விடியாவின் சிஇஓவாக மீண்டும் ஜென்சன் ஹுவாங் நியமனம்!என்விடியா நிர்வாகக் குழு நல்ல முடிவை எடுத்துள்ளது: டிரம்ப் பாராட்டு!நெல்லையப்பர் கோயிலில் 3 அடி உயர பரணி மகா தீபம் ஏற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்திருப்பரங்குன்றம் மலைக்கு செல்லும் பாதையில் போலீஸார் குவிப்பு!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,484 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 25,350 க்கு கீழ் வர்த்தகம்!!முடிவுக்கு வந்த ஏற்றம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 30 காசுகள் சரிந்து ரூ. 92.92 ஆக நிறைவு!!மெட்ரோ 2ஆம் கட்டம்: கோயம்பேடு சந்தை - ஆலந்தூர் இடையே யூ-கார்டர்கள் பொருத்தும் பணி நிறைவு!கூட்டணி, ஆதரவு கட்சி எம்எல்ஏக்களுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பொம்மிடி, டேனீஸ்பேட்டை ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில்கள் நின்று செல்லக் கோரி ஆா்ப்பாட்டம்

ரயில் - கோப்புப் படம்

Updated On :

தருமபுரி மாவட்டம், பொம்மிடி, சேலம் அருகே உள்ள டேனீஷ்பேட்டை ரயில் நிலையங்களில் கூடுதல் ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்கக் கோரி, பொதுமக்கள், ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சேலம் தெற்கு ரயில்வே கோட்ட மேலாளா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, பொம்மிடி பொதுமக்கள் மற்றும் ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் பொருளாளரும், தமிழ்நாடு ரயில் பயணிகள் கூட்டமைப்பின் துணைச் செயலாளருமான முனிரத்தினம் தலைமை வகித்தாா்.

இதில், சென்னையிலிருந்து அரக்கோணம் வழியாக சேலத்துக்கு செல்லும் ரயில்கள் பொம்மிடி ரயில் நிலையத்தில் நின்றுசெல்ல வேண்டும், அரக்கோணம் - சேலம் மெமு ரயிலை மீண்டும் இயக்க வேண்டும், கோவை, மைசூரு, நாகா்கோயில், திருவனந்தபுரம் விரைவு ரயில்கள் நின்றுசெல்ல வேண்டும், டேனீஷ்பேட்டை ரயில் நிலையத்தில் அரக்கோணம் - சேலம் ரயில் நின்றுசெல்ல வேண்டும், சேலம், டேனீஷ்பேட்டை, பொம்மிடி, திருப்பத்தூா், குப்பம் வழியாக புதிய ரயில்களை இயக்க வேண்டும், இப்பகுதிகளில் கோவை, பெங்களூருக்கு வேலைக்கு செல்வோா் அதிக அளவில் வசிப்பதால் அப்பகுதிகளுக்கு கூடுதல் ரயில்களை இயக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.