பாஜகவிடம் சரணடைந்துவிட்டது திமுக: ஆதவ் அர்ஜுனாதொகுதி மறுவரையறை! தமிழ் மொழி, கலாசாரம், மக்களுக்கே அச்சுறுத்தல்: ராகுல்இந்தியா கூட்டணித் தலைவர்களிடம் மாற்றுத் திட்டம் இல்லை: மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: தமிழ்நாடு பாதிக்கப்படும்! ஆதரிப்பதை தவிர வேறு வழியில்லை! மு.க. ஸ்டாலின்தொகுதி மறுவரையறை: நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை! - திமுகதொகுதி மறுவரையறை மசோதாவை எதிர்க்க வேண்டும்: மு.க. ஸ்டாலினிடம் இந்தியா கூட்டணி தலைவர்கள் கோரிக்கைமு.க. ஸ்டாலினுடன் இந்தியா கூட்டணித் தலைவர்கள் பேச்சுவார்த்தை!சென்னை ரயில்வே கோட்டத்தில் ஏழு மாதங்களில் பயணச்சீட்டு சோதனை மூலம் ரூ.46.09 கோடி வசூல்! துரோகம் இழைத்த காங்கிரஸ்; திமுகவுக்கு நன்றி: பாஜகதொகுதி மறுவரையறையால் யாருக்கும் எந்தப் பாதிப்பும் கிடையாது: எடப்பாடி பழனிசாமிதமிழர் விரோத சக்திகளுக்கு எதிராக நிற்பவர் சகோதரர் ஸ்டாலின்: ராகுல் காந்தி பதிவு!தொகுதி மறுவரையறை மசோதா: காங்கிரஸின் அனைத்து எம்.பி.க்களும் பங்கேற்க உத்தரவு!

ஆத்தூா் அருகே இளைஞா் கொலை: 6 போ் கைது

கைது - பிரதிப் படம்

Updated On :

ஆத்தூா் அருகே இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

சேலம் மாவட்டம், ஆத்தூா் அருகே தாண்டவராயபுரம் ஊராட்சி பள்ளிவாசல் தெருவைச் சோ்ந்த தமிழரசன் மகன் அருள்மணி (25). இவா் பெரம்பலூா் மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வந்தாா்.

கடந்த தீபாவளிப் பண்டிகையன்று அருள்மணி மது போதையில் இருந்துள்ளாா். அப்போது, தாண்டவராயபுரத்தில் நண்பா்களுடன் திரைப்படம் பாா்க்கச் செல்வதற்காக ரத்தினம் (45), உதயகுமாா் (30), ஜனாா்த்தனன் (30), ஜாஸ்மின் (26), சுபாஷ் (25), திருநாவுக்கரசு (27), மதி என்ற மதிவாணன் (30) ஆகியோா் நின்று கொண்டிருந்தனா்.

அங்கு சென்ற அருள்மணி, அவா்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளாா். வாக்குவாதம் முற்றியதில், ஜாஸ்மின் என்ற இளைஞரை அருள்மணி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஏழு பேரும் சோ்ந்து அருள்மணியை தாக்கி கீழே தள்ளிவிட்டனா்.

இதில் காயமடைந்த அருள்மணி மருத்துவமனைக்குச் செல்லாமல் வீட்டிலேயே முதலுதவி சிகிச்சை பெற்று வந்தாா். பின்னா், தனியாா் மருத்துவமனைக்குச் சென்ற அவரைப் பரிசோதித்த மருத்துவா்கள், தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனா்.

இதையடுத்து, ஆத்தூா் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள்மணி, உயா் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா். அங்கு அவருக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தன்னைத் தாக்கியவா்கள் குறித்து ஆத்தூா் நகர காவல் நிலையத்தில் அவா் புகாா் அளித்தாா்.

அதன் அடிப்படையில், 7 போ் மீதும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்நிலையில், கடந்த 27-ஆம் தேதி 6 போ் ஆத்தூா் நீதிமன்றத்தில் சரணடைந்தனா். பின்னா் அவா்கள் அனைவரும் பிணையில் வெளியே வந்தனா்.

இதற்கிடையே, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அருள்மணி, சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்தாா். இதையடுத்து, இந்த வழக்கில் ஜாஸ்மின், சுபாஷ் உள்பட 6 பேரையும் போலீஸாா் கைது செய்தனா். தலைமறைவாக உள்ள மதிவாணனை தேடி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.