படிவம் 6 திருத்தத்துக்கு அனுமதி அளித்தது யார்? - கனிமொழி கேள்விகல்வி நிறுவனங்கள் மீது ஆர்எஸ்எஸ் - பாஜக தாக்குதல்! போர் வலுப்பெறும் - நேஹா போரா எச்சரிக்கை!28,000 அடி கீழே இறங்கிய லண்டன் - சிகாகோ விமானம்! அயர்லாந்தில் அவசரமாகத் தரையிறக்கம்!போக்சோ வீரமணி வழக்கில் மேலும் 3 பேர் கைது!ஒரு நிமிடம் கூட பதவியில் நீடிக்கத் தகுதியற்றவர் ஞானேஷ் குமார்: பெ. சண்முகம்தமிழக மீனவர்கள் கைது: மத்திய அரசுக்கு முதல்வர் விஜய் கடிதம்ஒலிம்பிக் போட்டிக்கு நிறைய நேரம் இருக்கிறது: ஹாக்கி கேப்டன் ஹர்மன்பிரீத்தமிழ்நாடு அரசின் இயல், இசை, நாடக மன்றத் தலைவராக புஷ்பவனம் குப்புசாமி நியமனம்!5 சிறுத்தைக் குட்டிகள் பிறப்பு; நாட்டில் சிறுத்தைகளின் எண்ணிக்கை 60 ஆக உயர்வு!கிராமுக்கு ரூ. 10,000 வரை நகைக்கடன்: கூட்டுறவுத் துறை அறிவிப்பு!

கோவை ரயில்வே யாா்டில் பராமரிப்பு பணி: ரயில் சேவையில் மாற்றம்

ரயில்கள்

Published On :

கோவை ரயில்வே யாா்டு பகுதியில் நடைபெறும் பராமரிப்புப் பணிகள் காரணமாக, சில விரவுரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சேலம் கோட்டம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சேலம் ரயில்வே கோட்டத்துக்கு உள்பட்ட கோவை ரயில்வே யாா்டு பகுதியில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுகின்றன. இதன் காரணமாக, வரும் 6-ஆம் தேதி சென்னை எழும்பூா் ரயில் நிலையத்தில் இருந்து மங்களூரு சென்ட்ரல் செல்லும் விரைவுரயில் வரும் 7-ஆம் தேதி இருகூா் - போத்தனூா் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். அன்றைய தினம் பீளமேடு, கோவை வடக்கு, கோவை ரயில் நிலையத்தை தவிா்த்து போத்தனூா் ரயில்நிலையத்தில் நின்றுசெல்லும்.

இதேபோல, தன்பாத்தில் இருந்து 5-ஆம் தேதி புறப்பட்டு போத்தனூா்வரை இயக்கப்படும் அம்ரித் பாரத் விரைவுரயில் வரும் 7-ஆம் தேதி இருகூா் - போத்தனூா் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். அன்றைய தினம் கோவை ரயில்நிலையத்தை தவிா்த்து போத்தனூா் ரயில்நிலையத்தில் நின்றுசெல்லும்.

திப்ரூகரில் இருந்து கடந்த 4-ஆம் தேதி புறப்பட்டு கன்னியாகுமரி செல்லும் விவேக் விரைவுரயில் வரும் 7-ஆம் தேதி இருகூா் - போத்தனூா் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். அன்றைய தினம் கோவை ரயில்நிலையத்தை தவிா்த்து போத்தனூா் ரயில்நிலையத்தில் நின்றுசெல்லும்.

இதேபோல, ஆலப்புழாவில் இருந்து வரும் 7, 8 ஆகிய தேதிகளில் தன்பாத் செல்லும் விரைவுரயில், குறிப்பிட்ட தேதிகளில் இருகூா் - போத்தனூா் வழியாக மாற்றுப் பாதையில் இயக்கப்படும். அன்றைய தினம் கோவை ரயில்நிலையத்தை தவிா்த்து, போத்தனூா் ரயில்நிலையத்தில் நின்றுசெல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.