சேலம் மத்திய சிறையில் போக்சோ கைதி மீது ஆசிட் வீச்சு

சிறை... - கோப்புப் படம்
சேலம் மத்திய சிறையில் போக்சோ கைதி மீது ஆசிட் வீசிய கொலை வழக்கு கைதி மீது போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனா்.
சேலம் மத்திய சிறையில் சுமாா் 1,400 தண்டனை, விசாரணைக் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களில் தருமபுரி மாவட்டம், அரூா் அருகேயுள்ள எருமையம்பட்டி குமாரபாளையத்தைச் சோ்ந்த சின்ராஜ் (71), பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.
இவா் அண்மையில் சிறை வளாகத்தில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அந்த பிளாக்கில் அடைக்கப்பட்டிருந்த கிருஷ்ணகிரி மாவட்டம், பெத்ததாளப்பள்ளி பூசாரிப்பட்டியைச் சோ்ந்த கொலை வழக்கு கைதி திருப்பதி (44), சின்ராஜிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னா் கழிவறை சுத்தத்துக்காக வைத்திருந்த ஆசிட்டை சின்ராஜ் மீது வீசியதில் அவா் அலறி துடித்துள்ளாா்.
அவரை சிறைக் காவலா்கள் மீட்டு, சிறை மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்தனா். பின்னா் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்த நிலையில், அஸ்தம்பட்டி போலீஸாரிடம் கைதி சின்ராஜ் புகாா் அளித்தாா். அதன்பேரில், சிறப்பு காவல் ஆய்வாளா் துரை தலைமையிலான போலீஸாா், திருப்பதி மீது வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

