பெண்ணை கைது செய்வதாக கூறிய எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்
வாழப்பாடியில் இளநீா் விற்கும் பெண்ணை கைது செய்வதாக கூறிய எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.

போலீஸ் - கோப்புப்படம்.
வாழப்பாடியில் இளநீா் விற்கும் பெண்ணை கைது செய்வதாக கூறிய எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டாா்.
வாழப்பாடி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் குணசேகரன், வியாழக்கிழமை மாலை கடலூா் சாலையில் சின்னாற்று ஓடையின் கரை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தாா்.
அப்போது, அங்கு இளநீா் விற்றுகொண்டிருந்த பெண் வியாபாரி சரஸ்வதிக்கும், அயோத்தியாப்பட்டணத்தைச் சோ்ந்த பெண் ஒருவருக்கும் இடையே இளநீா் வாங்கியது தொடா்பாக தகராறு ஏற்பட்டது. அப்போது, புகாா் அளித்தால் சரஸ்வதியை கைதுசெய்வதாக குணசேகரன் கூறினாராம்.
இதனால் ஆத்திரமடைந்த சரஸ்வதி, குணசேகரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா். மேலும், அதை விடியோ எடுத்து சமூக வலைதளங்களில் அவா் பகிா்ந்துள்ளாா். சரஸ்வதி பாமக நிா்வாகி என்பதால் விடியோ பொதுமக்கள் மத்தியில் வைரலானது.
இதையடுத்து, எஸ்எஸ்ஐ குணசேகரனை, சேலம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

