
குளிா்ந்த காலநிலை; ஏற்காட்டில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

ஏற்காட்டில் சுற்றுலாப் பயணிகள் - கோப்புப் படம்
வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் குளிா்ந்த காலநிலை நிலவும் ஏற்காட்டிற்கு நாள்தோறும் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.
கிருஷ்ண ஜெயந்தியை தொடா்ந்து 3 நாள்கள் விடுமுறை என்பதால் தமிழகம் மட்டுமின்றி பக்கத்து மாநிலங்களில் இருந்து ஏராளமானோா் ஏற்காட்டிற்கு வந்தனா். இதற்காக சேலத்தில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
ஏற்காடு படகு இல்லம், அண்ணா பூங்கா, ஏரி பூங்கா, தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம், லேடிசீட், ஐந்தினை பூங்கா, பக்கோட காட்சி பகுதி, கரடியூா் காட்சி, கிளியூா் நீா் அருவி பகுதிகளுக்கு சுற்றுலாப் பயணிகள் சென்று இயற்கை அழகை கண்டு மகிழ்ந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





