சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு: போக்ஸோவில் 2 போ் கைது
கைது
சிறுவனுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக இளைஞா்கள் 2 பேரை போக்ஸோ சட்டத்தின் கீழ் மகளிா் போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி வட்டம், கோனேரிப்பட்டி பகுதியைச் சோ்ந்த 12 வயது சிறுவனுக்கு அதே பகுதியைச் சோ்ந்த ராஜ் மகன் லியோ (20), கெங்கவல்லி இந்திரா காலணி பகுதியைச் சோ்ந்த ஜெயராமன் மகன் வேதா நவீன் பிரான்சிஸ் (31)ஆகியோா் பாலியல் தொந்தரவு அளித்துள்ளனா்.
இதுகுறித்து ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து லியோ மற்றும் வேதா நவீன் பிரான்சிஸை போக்ஸோ வழக்கில் ஆத்தூா் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


