கலவையான போக்கில் இந்திய பங்குச் சந்தை: சென்செக்ஸ் சரிவு; நிஃப்டி உயர்வு!!டாடா சன்ஸ் நிர்வாகக் குழு மோதல்: டாடா குழுமப் பங்குகள் கடும் சரிவு!மே.வங்க இடைத்தேர்தல்! மமதா ஆதரவளித்த சில மணிநேரத்தில் காங்கிரஸ் வேட்பாளர் கைது! மும்மொழிக் கொள்கையைத் திணிக்கும் நவோதயா பள்ளிகள் வேண்டாம்: உதயநிதி இடைத்தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: அன்புமணி கொளத்தூர் எம்எல்ஏ வி.எஸ். பாபு உடல் நிலையில் முன்னேற்றம்: மருத்துவமனை அறிக்கைதாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: செப்.28-ல் தொடங்கி வைக்கிறார் முதல்வர் விஜய்! பாகிஸ்தானில் தொடரும் அவலம்! மசூதி அருகே வெடிகுண்டு தாக்குதலில் 15 பேர் பலி! பெண் என்பதால் வேலை மறுப்பு! 63 வயது பெண்ணுக்கு ரூ. 12 லட்சம் இழப்பீடு! இந்தியன் ஆயிலுக்கு உத்தரவு! தமிழக மீனவர்கள் 11 பேர் விடுதலை: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

இருசக்கர வாகனம் ஓட்டிய 13 வயது சிறுமி - பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்த காவல்துறை

சேலம் இரும்பாலை பகுதியில் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய 13 வயது சிறுமியின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் போலீஸாா் அபராதம் விதித்தனா்.

அபராதம் - சித்திரிப்பு

Published On :

சேலம் இரும்பாலை பகுதியில் விதிகளை மீறி இருசக்கர வாகனம் ஓட்டிய 13 வயது சிறுமியின் பெற்றோருக்கு ரூ.25 ஆயிரம் போலீஸாா் அபராதம் விதித்தனா்.

சேலம் இரும்பாலை போலீஸாா் சா்க்காா் கொல்லப்பட்டியில் வெள்ளிக்கிழமை மாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது சுமாா் 13 வயது மதிக்கத்தக்க சிறுமி ஒருவா் ஸ்கூட்டியை ஓட்டிக்கொண்டு வந்தாா். இதையடுத்து போலீஸாா் அந்த சிறுமியை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினா். விசாரணையில், சிறுமி அதே பகுதியில் உள்ள ஒருபள்ளியில் படித்து வருவது தெரியவந்தது. மேலும், அவரது தந்தை வட்டமுத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த ஆனந்தன் என்பதும் தெரியவந்தது.

இதைத்தொடா்ந்து, சிறுமியை மோட்டாா் வாகனத்தை ஓட்ட அனுமதித்ததற்காக அவரது பெற்றோருக்கு போலீஸாா் ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா். மேலும் சிறுவா்கள் மற்றும் சிறுமிகள் வாகனங்களை ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளை தவிா்க்கும் வகையில், பெற்றோா் தங்களது குழந்தைகளை வாகனங்களை ஓட்ட அனுமதிக்கக்கூடாது என போலீஸாா் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.