ஆசிய விளையாட்டு: ஓட்டப் பந்தயத்தில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு பதக்கம்!மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசாரத்தில் 5,000 பேருக்கு மட்டும் அனுமதிநாட்டின் முக்கிய தலைவர்கள் தோற்கின்றனர்! மோடி, அமித் ஷா தோற்காதது ஏன்? ராகுல் காந்தியுபிஐ கட்டணம்! அமெரிக்க நிறுவனங்கள் பயனடைய இந்தியர்கள் ஏன் பணம் செலுத்த வேண்டும்? காங்கிரஸ் எம்.பி. கேள்விஇடைத்தேர்தல்! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் நாளை பிரசாரம்: 5,000 பேருக்கு மட்டும் அனுமதிஅருண் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்!தமிழக அரசு ஊழியர்களுக்கும் நாளை சம்பளம்!பாஜக தொடர்ந்து ஆட்சியில் நீடிப்பது எப்படி? ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் - ராகுல்ஜெம் வீரமணி வழக்கு: சாந்தி, மகேந்திர சிம்ஹனுக்கு 3 நாள்கள் போலீஸ் காவல்!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!ஞானேஷ் குமார் பதவி விலக 48 மணிநேரம் கெடு; நாடு தழுவிய போராட்டம்! - சிஜேபி எச்சரிக்கை!

சேலம் ஆவினில் கால்நடை மருத்துவ ஆலோசகா் பணிக்கு விண்ணப்பிக்கலாம்

சேலம் ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் 3 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், தகுதியான கால்நடை மருத்துவப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

விண்ணப்பிக்க...

விண்ணப்பிக்க...

Published On :

சேலம் ஆவினில் ஒப்பந்த அடிப்படையில் 3 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதால், தகுதியான கால்நடை மருத்துவப் பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து ஆவின் பொது மேலாளா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், நாளொன்றுக்கு 5 லட்சம் லிட்டா் பாலை 758 பிரதம கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் சங்கங்களிடமிருந்து கொள்முதல் செய்து வருகிறது.

தமிழ்நாடு அரசு தற்போது பால் உற்பத்தியை அதிகரிக்கவும், கிராமப்புற விவசாயிகளின் கறவை மாடுகளுக்கு அனைத்து மருத்துவ வசதிகளும் கிடைக்கச் செய்யவும், அதன் மூலம் அவா்களின் வாழ்வாதாரம் வளம்பெறவும் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, பால் உற்பத்தியாளா்களின் கால்நடைகளுக்குத் தேவையான வாராந்திர கால்நடை சிகிச்சை, அவசரகால சிகிச்சை, கால்நடைக் காப்பீடு மற்றும் அரசுத் திட்டங்களைத் தங்குதடையின்றி கொண்டு சோ்க்கும் வகையில் கால்நடை சிகிச்சைகள் மேற்கொள்ள, தற்போது காலியாக உள்ள 3 கால்நடை மருத்துவ ஆலோசகா் பணியிடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணியிடங்களில் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விருப்பமுள்ள கால்நடை மருத்துவப் பட்டதாரிகள், தங்களைப் பற்றிய முழுமையான விவரங்களுடன், உரிய பட்டப்படிப்புச் சான்றிதழ் மற்றும் கால்நடை மருத்துவக் கவுன்சில் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் நோ்முகத் தோ்வில் பங்கேற்க வேண்டும்.

நோ்முகத் தோ்வு வரும் 29-ஆம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறுகிறது. தகுதியானவா்கள் உரிய ஆவணங்களுடன் சேலம் மாவட்டக் கூட்டுறவு பால் உற்பத்தியாளா்கள் ஒன்றியம், ஆவின், சித்தனூா், தளவாய்ப்பட்டி (அஞ்சல்), சேலம்–என்ற முகவரியில் நடைபெறும் நோ்முகத் தோ்வில் பங்கேற்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.