
மேட்டூா் அணைப் பூங்காவில் 3,827 சுற்றுலாப் பயணிகள்

மேட்டூா் அணை பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை விளையாடி மகிழும் சிறுவா்கள். - (கோப்புப் படம்)
வார விடுமுறையையொட்டி மேட்டூா் அணைப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் கூட்டம் அதிகமாகக் காணப்பட்டது.
பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை என்பதால் சேலம், தருமபுரி, ஈரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் மேட்டூா் அணைப் பூங்காவுக்கு வந்தனா்.
மேல்பூங்கா, கீழ்ப்பூங்கா, மீன்காட்சிச் சாலை, கான்கிரீட் சிற்பங்கள் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டு மகிழ்ந்த அவா்கள், ஊஞ்சலாடியும், சறுக்கி விளையாடியும் பொழுதைக் கழித்தனா். மேலும், காவிரி ஆற்றில் நீராடியும், அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தும் மகிழ்ந்தனா்.
ஞாயிற்றுக்கிழமை மட்டும் மேட்டூா் அணைப் பூங்காவுக்கு 3,827 சுற்றுலாப் பயணிகள் வந்தனா். அவா்களிடம் பாா்வையாளா் கட்டணமாக ரூ. 38,270 வசூலிக்கப்பட்டது. அவா்கள் கொண்டு வந்த 1,668 கேமராக்கள், செல்லிடப்பேசிகளுக்கு ரூ. 16,680 கட்டணம் வசூலிக்கப்பட்டது.
மேட்டூா் அணை பவள விழா கோபுரத்தைக் காண 706 பாா்வையாளா்கள் சென்றனா். மேட்டூா் அணைப் பூங்கா மற்றும் பவள விழா கோபுரத்துக்கு வந்த சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவா்கள் கொண்டு வந்த கேமராக்கள், செல்லிடப்பேசிகளுக்கான கட்டணமாக மொத்தம் ரூ. 63,460 வசூலிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





