சிஎஸ்கே போராடி தோல்விதிமுக இரட்டை வேடம்! தமிழ்நாட்டில் ஒரு கொள்கை; புதுவையில் வேறு கொள்கை - இபிஎஸ்தமிழ்நாட்டின் டிஎன்ஏவை சிதைக்க என்டிஏ முயற்சி : மு.க. ஸ்டாலின்பாரசீக வளைகுடா நாடுகளின் எண்ணெய் உற்பத்தி வளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்த ஈரான் திட்டம்காஸா மீது இஸ்ரேல் தாக்குதல்: பொதுமக்கள் பலி!பிரசார மேடையில் நடனமாடி வாக்காளர்களைக் கவர்ந்த அஸ்ஸாம் முதல்வர்!
/

சாலையை இணைக்கும் பாலம் உடைந்ததால் 3 ஆண்டுகளாக அவதிப்படும் மக்கள்

திண்டுக்கல், பிப். 8: கிராமச் சாலையை இணைக்கும் பாலம் உடைந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பலரிடம் முறையிட்டும் தீர்வு ஏற்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம்,

Updated On :20 செப்டம்பர் 2012, 10:10 am

திண்டுக்கல், பிப். 8: கிராமச் சாலையை இணைக்கும் பாலம் உடைந்து 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், பலரிடம் முறையிட்டும் தீர்வு ஏற்படாததால் கிராம மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திண்டுக்கல் மாவட்டம், நத்தம் வட்டத்தில் உலுப்பக்குடி அருகே உள்ளது புன்னப்பட்டி கிராமம். திண்டுக்கல் - நத்தம் மாநில நெடுஞ்சாலையில் இருந்து 2 கிமீ தொலைவில் திருமணிமுத்தாறு செல்கிறது. இந்த ஆற்றைக் கடந்து புன்னப்பட்டி கிராமத்திற்குச் செல்ல, பல ஆண்டுகளுக்கு முன் ஒரு பெரிய பாலம் கட்டப்பட்டது.

சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால், பாலத்தின் ஒரு பகுதி உடைந்து போனது. தாற்காலிகமாக பாலம் சரிசெய்யப்பட்டது. ஆனால் மீண்டும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாலம் உடைந்து போனது.

பாலத்தை சரிசெய்து கொடுக்க வேண்டும் என, இத்தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் அதிமுக அமைச்சருமான இரா. விசுவநாதனிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்திருந்தனர். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லையாம்.

இதேபோல் கடந்த மக்களவைத் தேர்தலின்போது வாக்கு சேகரிக்க வந்த என்.எஸ்.வி. சித்தனிடமும் கோரிக்கை வைத்திருந்தனர். ஆனாலும் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

இதனால் ஆற்றின் குறுக்கே தாற்காலிக நடைபாதை அமைத்து கிராம மக்கள் சென்று வருகின்றனர். இரவு நேரங்களில் ஊருக்குள் புதிதாக வரும் ஆட்டோக்களும், பொதுமக்களும், பாலம் உடைந்திருப்பது தெரியாமல் அந்தப் பாதையை கடக்கும் போது கீழே விழுந்து அடிபடுகின்றனர்.

மழைக்காலத்தின் போது, 2 கிமீ தூரத்தில் உள்ள பிரதான சாலையை அடைய கள்ளிப்பட்டி, கோவில்பட்டி, நத்தம் வழியாக 7 கிமீ தூரம் சுற்றிச் செல்ல வேண்டியிருக்கிறது. இந்த வழித்தடத்தில் பேருந்து வசதி கூட தற்போது இல்லாத நிலை.

சுமார் 500 குடும்பங்கள் இக் கிராமத்தில் வசித்து வருகின்றன. 3 ஆண்டுகளுக்கும் மேலாக சாலையைக் கடக்க வசதி இல்லாத நிலையில், அதை ஒரு போராட்டத்தின் மூலம் வெளிப்படுத்த எங்களால் முடியவில்லை. திக்கற்றவர்களுக்கு தெய்வமே துணை என்ற நிலையிலேயே காலத்தை ஓட்டி வருகிறோம் என்றார் இந்த கிராமத்தைச் சேர்ந்த விவசாயக் கூலி பி.எழுவன்.

ஆதரவற்ற நிலையில் இருக்கும் கிராம மக்களுக்கு பாதை வசதியை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்க வேண்டும் என ஊர்மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இது குறித்து மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் க.அருண்மணியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

புன்னப்பட்டி கிராமத்தில் பழுதடைந்துள்ள பாலத்தை இடித்துவிட்டு புதிய பாலம் அமைப்பதற்காக ரூ.84 லட்சமும், பாலத்தின் இருபுறங்களிலும் தலா 2கிமீ தூரம் சாலை அமைக்க ரூ.41 லட்சமும் ஆக மொத்தம் ரூ.1.25 கோடிக்கு, நபார்டு-15 திட்டத்தின் கீழ் முன்மொழிவுகள் அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்தவுடன் புதிய பாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.