நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஈஞ்சிமார்கள் விற்பனை மந்தம் : மலைஜாதியினர் வருவாய் இன்றி தவிப்பு

பழனி, ஜூலை 4:    ஈஞ்சிமார்கள் விற்பனையில் மந்தநிலை காணப்படுவதால் பழனியை அடுத்த குதிரையாறு அணைப்பகுதி மலைஜாதியினர் வருவாயின்றி தவிக்கின்றனர்.   வீடுகளில் தரையை சுத்தம் செய்ய ஈஞ்சிமார்கள் பயன்படுத்தப்பட

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 11:13 am

என்.​ அங்​கு​பாபு

பழனி, ஜூலை 4:    ஈஞ்சிமார்கள் விற்பனையில் மந்தநிலை காணப்படுவதால் பழனியை அடுத்த குதிரையாறு அணைப்பகுதி மலைஜாதியினர் வருவாயின்றி தவிக்கின்றனர்.

  வீடுகளில் தரையை சுத்தம் செய்ய ஈஞ்சிமார்கள் பயன்படுத்தப்படுகின்றன. ஈஞ்சிமார்களுக்குப் பயன்படும் ஒருவகைப் புற்கள் பழனியை அடுத்த கொடைக்கானல் மலைச்சரிவுகளில் விளைகின்றன. இவற்றை தனியே வளர்த்து அறுவடை செய்ய இயலாதது. எனவே மலைப்பகுதியில் இருந்து வரும் புற்களைக் கொண்டு ஈஞ்சிமார்கள் தயாரிக்கப்படுகின்றன.

  பழனியை அடுத்த குதிரையாறு அணைப்பகுதியில் உள்ள மலைவாழ் மக்கள் வனத் துறைக்கு இதற்கான கட்டணம் செலுத்தி அவர்கள் அனுமதியுடன் மலைச்சரிவுகள் மற்றும் அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்று இவற்றை அறுத்து வந்து விற்பனை செய்கின்றனர்.

  குதிரையாறை அடுத்த கொடைக்கானல் மலையில் உள்ள குளிர்மேடு, சந்துப்பட்டி, பாறவெளி, கடுக்காகுடை ஆகிய பகுதிகளில் இவை அதிக அளவில் விளைகின்றன.  மலைவாழ் மக்கள் இந்தப் புற்களை அறுவடை செய்து வர ஒருவாரம் ஆகிறது.

  புற்களை அறுத்த பின்னர் பாறைவெளிகளில் அவற்றைக் குறிப்பிட்ட அளவிற்கு காயவைத்துப் பின்னர் கட்டி கழுதைகள் மூலம் எடுத்து வருகின்றனர். பதம் இல்லாமல் கொண்டு வரும் புற்கள் பயனின்றிப் போய்விடுவதால் இதில் அதிக கவனம் தேவை.

  இதுகுறித்து மலைவாழ் மக்களில் ஒருவரான மொட்டையன் கூறும்போது, புற்களை அறுக்க மிகவும் சிரமப்பட வேண்டியுள்ளது. இயற்கை மாற்றங்கள் மட்டுமின்றி சிலநேரம் காட்டெருமை, யானை, சிறுத்தை, வரிப்புலி போன்ற காட்டு விலங்குகள் தாக்கும் பயமும் உண்டு என்றார்.

  பழனிச்சாமி என்பவர் கூறும்போது, இந்தப் புற்களை தரைப்பகுதிக்கு கொண்டு வந்து விற்கும்போது 10 ஈஞ்சிக்கட்டு அடங்கிய ஒரு பெரிய கட்டுக்கு ரூ.700 முதல் 900 வரைதான் கிடைக்கிறது. ஒருதடவை மேலே ஏறி இறங்கினால் சுமார் 100 பெரிய கட்டு சேகரிக்கலாம். ஒருவாரம் சாப்பாடு, போக்குவரத்து எனப் பார்த்தால் எங்களுக்கு சுமார் ஆயிரம் முதல் ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் கிடைக்கிறது. மாதம் 3 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து ஐநூறு ரூபாய்தான் கிடைக்கும். இது மிகவும் சொற்பமான வருவாய். இதனை ஆண்டு முழுவதும் அறுக்க முடியாது. 4 அல்லது 5 மாதம் தான் கிடைக்கும். மீதி நாள் தேன், கிழங்கு, கடுக்காய், நெல்லிக்காய் ஆகியவற்றைப் பறித்து விற்கிறோம். அதுவும் போதிய விற்பனை இல்லாத நிலை உள்ளது. ஆகவே மலைவாழ் மக்கள் குடும்பத்தினருக்குத் தமிழக அரசு நிவாரண உதவி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் எனத் தெரிவித்தார்.

  இவர்கள் கொண்டு வரும் ஈஞ்சிமார்களை அணையின் அடிவாரத்திலேயே வியாபாரிகள், பெண்கள் வாங்கிச் செல்கின்றனர்.

  வியாபாரி பொன்னுசாமி கூறியதாவது:

  முந்தைய காலங்களில் வீடுகளில் ஈஞ்சிமாரும், வெளியே ஈக்கிமாரும் நகர மற்றும் கிராமவாசிகள் பயன்படுத்தி வந்தனர். நாகரீகம் அதிகமாக, அதிகமாக வீடுகளில் டைல்ஸ், மொசைக் என அமைக்கப்படுவதால் வேறு விதமான நவீன விளக்குமார்களும், பிளாஸ்டிக் விளக்குமாரும் வந்துவிட்டன. பல இடங்களில் கைப்பிடியுடன் கூடிய துணி விரிப்பால் துடைக்கின்றனர். இதனால் இவற்றுக்குப் போதிய வரவேற்பு இல்லாமல் போய்விட்டது.

  இந்தப் புற்களை சரியான அளவு வெட்டி, அதற்கு கைப்பிடி போட்டு பிரித்து மார்க்கெட்டிற்கு விற்கும்போது ஒன்றுக்கு சுமார் 30 முதல் 40 ரூபாய் வரை ஆகிறது. கடைக்காரர்கள் இதற்குமேல் விலை வைக்கின்றனர். இதனால் விலை கட்டுப்படியாகவில்லை எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.