கொடைக்கானல், ஜன. 8: கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் மின்சாரக் கம்பத்திலிருந்து தவறி விழுந்த ஊழியர் உயிரிழந்தார்.
கீழ்மலைப் பகுதியான மச்சூரில் வசிப்பவர் ஆறுமுகம் (50). இவர், மின்வாரியத் துறையில் பணியாற்றி வருகிறார். இவர், பண்ணைக்காடு ஊரல்பட்டி பகுதியில் உள்ள மின்கம்பத்தில் ஏறி வயர்களில் உள்ள பழுதை சரிசெய்து கொண்டிருந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக மின்கம்பத்திலிருந்து தவறி கீழே விழுந்ததில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு தாண்டிக்குடி போலீஸôர் மற்றும் மின்வாரியத் துறை அதிகாரிகள் விரைந்து வந்து, அவரது சடலத்தை தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இது குறித்து, தாண்டிக்குடி போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.