இலவச இதய மருத்துவ முகாம்
பழனி, ஜன. 8: பழனி சித்தனாதன் திருமண மண்டபத்தில், இலவச இதய மற்றும் நுரையீரல் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. நெய்க்காரபட்டி அரிமா சங்கம், சென்னை பிரன்டியர் லைப் லைன் மருத்துவமனை மற்றும் பழ


பழனி, ஜன. 8: பழனி சித்தனாதன் திருமண மண்டபத்தில், இலவச இதய மற்றும் நுரையீரல் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
நெய்க்காரபட்டி அரிமா சங்கம், சென்னை பிரன்டியர் லைப் லைன் மருத்துவமனை மற்றும் பழனி கிளை இந்திய மருத்துவ சங்கம் இணைந்து நடத்திய இம்முகாமுக்கு, சித்தனாதன் சிவனேசன் முன்னிலை வகித்தார்.
கொங்கு பேரவை மாரிமுத்து, அரிமா மாவட்டத் தலைவர் மயில்சாமி, சுப்புராஜ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில், நெய்க்காரபட்டி அரிமா சங்கத் தலைவர் வடிவேல், செயலர் கந்தசாமி, பொன்ராம், சீனிவாசன், தாஜூதீன் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர்.
முகாமில், 500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றுப் பயனடைந்தனர்.
இதில், சுமார் ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள ஈசிஜி, எக்கோ ஆய்வுகள் இலவசமாக மேற்கொள்ளப்பட்டன. மருத்துவர்கள் நாகமணி, பிரேம்சேகர், பாலாஜிராவ், மது ஆகியோர் பரிசோதனை செய்தனர்.
ஏற்பாடுகளை, மருத்துவமனை ஒருங்கிணைப்பாளர் மகாலட்சுமி, ஷாஜு ஆகியோர் செய்திருந்தனர். இதை முன்னிட்டு, நடமாடும் பரிசோதனை வாகனம் வரவழைக்கப்பட்டிருந்தது. மேலும், இந்த முகாமிலிருது பை-பாஸ் அறுவை சிகிச்சைக்கு 38 பேர் பரிந்துரை செய்யப்பட்டு, அழைத்துச் செல்லப்பட உள்ளனர்.
இவர்களுக்கு, கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் இலவசமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...