எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

ரத்த தான முகாம்

ராஜபாளையம், ஜன. 8: ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். ரத்த தான கிளப், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.      ரத்த தான முகாமை, விருதுநகர் மாவட்ட துணைப் போக்குவர

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:49 am

தினமணி

ராஜபாளையம், ஜன. 8: ராஜபாளையம் பி.ஏ.சி.ஆர். ரத்த தான கிளப், மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில், சாலை பாதுகாப்பு ரத்த தான முகாம் நடைபெற்றது.  

   ரத்த தான முகாமை, விருதுநகர் மாவட்ட துணைப் போக்குவரத்து ஆணையர் ரோட்டரிக்கோ துவக்கி வைத்தார். வட்டாரப் போக்குவரத்து அதிகாரி செல்வக்குமார் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக, ராஜபாளையம் டி.எஸ்.பி. ராஜகோபால்  ரத்த தானத்தின் அவசியம் குறித்து விளக்கினார்.

   ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன ஆய்வாளர் பன்னீர்செல்வம் வரவேற்று, முதல் ரத்த தானத்தை வழங்கினார். பி.ஏ.சி.ஆர். ரத்த தான கிளப் தலைவர் பி. ரவி முன்னிலை வகித்தார்.

   ராஜபாளையம் ரோட்டரி கிளப் மருத்துவர்கள் பன்னீர்செல்வம், கோதண்டராமன், ரோட்டரி ரத்த வங்கி மருத்துவ அதிகாரி ஜவகர்லால், விருதுநகர் மோட்டார் வாகன ஆய்வாளர் பாஸ்கரன், சிவகாசி மோட்டார் வாகன ஆய்வாளர் தர்மானந்தன் உள்பட பலர் பேசினர். இதில், ஏராளமானோர் ரத்த தானம் வழங்கினர்.

  ஸ்ரீவில்லிபுத்தூர் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி சங்கத் தலைவர் நாகராஜ் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.