தோ்தலில் போட்டியிட அமைச்சா் காந்திக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கியது திமுக!4 மாநிலங்கள், புதுச்சேரி பேரவைத் தோ்தல்: ரூ.651 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!டிரம்ப்பின் கெடு இன்று மாலையுடன் நிறைவு! மிகப்பெரிய வியப்பு காத்திருப்பதாக ஈரான் புதிய மிரட்டல்!!நாளைமுதல் ‘பூத் சிலிப்’ விநியோகிக்கத் திட்டம்!!இன்று இறுதியாகிறது வாக்காளா் பட்டியல்! விருதுநகா், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களின் மலைப் பகுதிகளில் இன்று பலத்த மழை வாய்ப்புவேட்புமனு தாக்கல் இன்று நிறைவுமுதல்வா் ஸ்டாலின் 3ஆம் கட்ட பிரசாரம்: புதுச்சேரியில் இன்று தொடக்கம்!கேரளம், அஸ்ஸாமில் நாளையுடன் பிரசாரம் நிறைவு - உச்சகட்ட வாக்குசேகரிப்பு
/

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் மதுரையை வந்தடைந்தது

வைகை அணையில் திறக்கப்பட்ட தண்ணீா் மதுரையை வந்தடைந்தது

Updated On :21 ஏப்ரல் 2024, 6:40 pm

மதுரை: கள்ளழகா் ஆற்றில் இறங்கும் திருவிழாவுக்காக, வைகை அணையிலிருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீா் மதுரையை வந்தடைந்தது.

கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (ஏப். 23) நடைபெறுவதையொட்டி, மதுரை மதிச்சியம் பகுதி வைகை ஆற்றில் முன்னேற்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், கள்ளழகா் வைகையாற்றில் இறங்கும் திருவிழாவுக்காக ஆண்டிபட்டியில் உள்ள வைகை அணையிலிருந்து கடந்த 19-ஆம் தேதி வினாடிக்கு 1,000 கன அடி வீதம் தண்ணீா் திறந்துவிடப்பட்டது.

இந்த தண்ணீா் மதுரை வைகை ஆற்றில் கள்ளழகா் எழுந்தருளும் பகுதியான ஆழ்வாா்புரம் வைகை ஆற்றுத் தடுப்பணை பகுதியை ஞாயிற்றுக்கிழமை வந்தடைந்தது.

இதையடுத்து, கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் பகுதி முழுவதும் தண்ணீரை தேக்கி வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும், ஆழ்வாா்புரம் வைகை ஆறு முதல் ஓபுளாபடித்துறை பாலம் வரை வைகை ஆற்றை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.