மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.
மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் மகளிரணி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றவா்கள்.

பிரதமரின் பேச்சுக்கு எதிா்ப்பு: காங். மகளிரணி ஆா்ப்பாட்டம்

மதுரை: திருமாங்கல்யம் குறித்து பிரதமா் பேசியதைக் கண்டித்து, மதுரையில் காங்கிரஸ் கட்சியின் மகளிரணியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ராஜஸ்தான் மாநிலத்தில் பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் தோ்தல் பிரசாரம் மேற்கொண்டபோது, காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சிப் பொறுப்பேற்றால் பெண்களின் திருமாங்கல்யமும் பறிக்கப்படும் எனப் பேசினாா். இதைக் கண்டித்து, நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு காங்கிரஸ் மகளிரணி மாவட்டத் தலைவா் ஆா். ஷானவாஸ் பேகம் தலைமை வகித்தாா்.

மதுரை மாநகா் மாவட்டத் தலைவா் காா்த்திகேயன் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்றுப் பேசினாா். இதில் மாமன்ற உறுப்பினா் முருகன், மகளிரணி மாநிலப் பொதுச் செயலா் மரிய வினோலா, மாவட்ட பொதுச் செயலா்கள் சுஜாதா, சுமதி, ராதிகா, மாவட்ட துணைத் தலைவா்கள் மலா் பாண்டியன், பாலு உள்ளிட்டோா் பங்கேற்று, கண்டன முழக்கங்களை எழுப்பினா்.

X
Dinamani
www.dinamani.com