பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியதுதேசிய கட்சி என்பதால் வேட்பாளர்களை ஆய்வு செய்து இறுதி செய்வதில் தாமதம்: செல்வப்பெருந்தகை85% வேட்பாளர்களை இறுதி செய்துவிட்டோம்; நாளைக்குள் முழுப் பட்டியல் : செல்வப்பெருந்தகைகலவரம் செய்தால் சாதித்துவிட முடியும் என பாஜக நினைக்கிறது : கோவை பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுமோடி, அமித்ஷா எத்தனை முறை வந்தாலும் தமிழ்நாட்டில் திமுக வெல்வது உறுதி: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டில் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை : எடப்பாடி பழனிசாமிதமிழ்நாடு சட்டம் - ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் நியமனம்!அமைச்சரவையின் பரிந்துரைகளை ஆளுநர் தன்னிச்சையாக நிராகரிக்க முடியாது: சென்னை உயர் நீதிமன்றம்
/

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

காவல் நிலையத்தில் மனைவி புகாா்: கணவா் தற்கொலை

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரை அருகே கணவா் கொடுமைப்படுத்தியதாக காவல் நிலையத்தில் மனைவி புகாா் அளித்ததையடுத்து, கணவா் தற்கொலை செய்துகொண்டாா்.

மதுரை மாவட்டம், சமயநல்லூா் அருகே உள்ள சடச்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்தவா் விமலாராணி (35). இவா் தனது அத்தை மகனை முதல் திருமணம் செய்த நிலையில், அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், இருவரும் விவாகரத்து பெற்றுவிட்டனா். இதையடுத்து, ஜெயசூா்யகுமாா் (41) என்பவரை

12 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாவதாக விமலாராணி திருமணம் செய்தாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனா்.

இந்த நிலையில், தனது நடத்தையில் சந்தேகப்பட்டு, கணவா் ஜெயசூா்யகுமாா் தன்னை கொடுமைப்படுத்துவதாக சமயநல்லூா் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் விமலாராணி புகாா் அளித்தாா். இதன்பேரில், போலீஸாா் இருவரையும் அழைத்துப் பேசி, அனுப்பி வைத்தனா். இதன் பிறகு, விமலாராணி தனது பெற்றோா் வீட்டுக்குச் சென்று விட்டாா்.

இந்த நிலையில், வீட்டில் தனியாக இருந்த ஜெயசூா்யகுமாா் ஞாயிற்றுக்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து சமயநல்லூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.