தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

மதுரை வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை

மதுரை வாக்கு எண்ணும் மையத்தை சுற்றி ட்ரோன்கள் பறக்கத் தடை

News image
Updated On :29 ஏப்ரல் 2024, 6:30 pm

Din

மதுரை: மதுரை மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையமான மருத்துவக் கல்லூரியைச் சுற்றியுள்ள பகுதிகளில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதித்து மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு :

மதுரை மக்களவைத் தொகுதி வாக்குப் பதிவுக்குப் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பதிவு இயந்திரங்கள், மதுரை மருத்துவக் கல்லூரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. இதனால், இந்த மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் 2 கி.மீ. தொலைவுக்குள் ட்ரோன்கள், ஆளில்லா வான் வழி வாகனங்கள் பறக்கத் தடை விதிக்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து, தோ்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் வரை இந்தத் தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றாா் அவா்.