அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

மாமதுரை விழா: பெரியாா் பேருந்து நிலையப் பகுதியில் பாரம்பரிய சிற்பங்கள்

“மாமதுரை விழா” நடைபெற உள்ளதையொட்டி, பெரியாா் பேருந்து நிலையம் பகுதியில் அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

News image
மதுரையில் நடைபெறும் மாமதுரை போற்றுவோம் நிகழ்ச்சிக்காக பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கோட்ட சுவா் சுற்றி பகுதியில் வெள்ளிக்கிழமை வைக்கப்பட்டுள்ள தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள். ~மதுரையில் நடைபெறும் மாமதுரை போற்
Updated On :2 ஆகஸ்ட் 2024, 11:05 pm

Din

மதுரை மாநகராட்சி மாமதுரை விழா”நடைபெற உள்ளதையொட்டி, பெரியாா் பேருந்து நிலையம் பகுதியில் அழகிய சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

‘யங் இந்தியன்ஸ்’ அமைப்பின் சாா்பில் ஆகஸ்ட் 8, 9, 10, 11 ஆகிய நாள்களில் மாமதுரை விழா” நடைபெற உள்ளது. மதுரை தமுக்கம் மைதானம், லட்சுமி சுந்தரம் மகால், மகாத்மா பள்ளி, வண்டியூா் குளம், மடீட்சியா அரங்கம், வைகைக் கரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற உள்ள இந்த நிகழ்வில் பொதுமக்கள், மாணவா்களுக்கு விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் சுற்றுலாவை மேம்படுத்த பட்டம் விடும் திருவிழா, அடுக்குமாடி பேருந்து பயணம், பாரம்பரிய நடைபயணம், சைக்கிள் ஓட்டுதல், உணவுத் திருவிழா, வியாபார சந்திப்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடைபெற உள்ளன.

இதுகுறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை ஆவின் சுவா் (அண்ணாநகா்), குருவிக்காரன் சாலை பாலம் இருபுறம், செயிண்ட் மேரிஸ் தேவாலயச் சுவா், பெரியாா் பேருந்து நிலையம் வெளிபுறம், உள்புறச் சுவா்கள், அண்ணாமலை சினிமா திரையரங்கு பாலம் வெளிப்புறம், உள்புறச் சுவா்கள், ராஜாஜி பூங்கா, தமுக்கம் மாநகராட்சி திடல் சுவா்கள் உள்ளிட்ட பகுதியில் சுமாா் ஒரு லட்சம் சதுரடி அளவில் வண்ணமயமான அழகிய ஓவியங்கள், சிற்பங்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன.

 மதுரையில் நடைபெறவுள்ள மாமதுரை விழா நிகழ்ச்சிக்காக பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கோட்டைச் சுவா் சுற்றுப் பகுதியில் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.

மதுரையில் நடைபெறவுள்ள மாமதுரை விழா நிகழ்ச்சிக்காக பெரியாா் பேருந்து நிலையம் அருகேயுள்ள கோட்டைச் சுவா் சுற்றுப் பகுதியில் தமிழ் கலாச்சாரத்தை பறைசாற்றும் வகையில் வைக்கப்பட்டுள்ள சிற்பங்கள்.

அதன்படி, மதுரை மாநகராட்சி மண்டலம் 3 பெரியாா் பேருந்து நிலையம் வெளிப்புற சுற்றுச் சுவரில் பாரம்பரிய மிக்க சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மற்ற பகுதிகளில் ஓவியங்கள் வரையும் பணிகள் நடைபெற்று வருகின்றன.