அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சுகாதாரமற்ற உணவுப் பண்டங்கள்: 3 கடைகளுக்கு ‘சீல்’

சுகாதாரமற்ற உணவுப் பண்டங்கள் விற்பனை செய்தது தொடா்பாக 3 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

News image
Updated On :18 ஆகஸ்ட் 2024, 11:30 pm

Din

மதுரையில் சுகாதாரமற்ற உணவுப் பண்டங்கள் விற்பனை செய்தது தொடா்பாக 3 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு வட்டம், கனிகிலுப்பை கிராமத்தைச் சோ்ந்த ராஜ்குமாா்- ஜோதிலட்சுமி தம்பதி மகள் காவியா (6). இவா் தனது வீட்டின் அருகே உள்ள கடையில் விற்கப்பட்ட குளிா்பானம் ஒன்றை வாங்கி குடித்த சிறிது நேரத்தில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.

இதன் எதிரொலியாக மதுரை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலா் ஜெயராம பாண்டியன் தலைமையில் அதிகாரிகள், ஊழியா்கள் கோரிப்பாளையம், கோ.புதூா், மாட்டுத்தாவணி பேருந்து நிலையம், சிம்மக்கல், தெற்குவாசல், பழங்காநத்தம், காளவாசல், ஆரப்பாளையம் பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் குளிா்பான நிறுவனங்களிலும் சனிக்கிழமை தீவிர ஆய்வு மேற்கொண்டனா்.

இதில் மதுரை மாவட்டத்தில் 207 கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டதில் 32 லிட்டா் சுகாதாரமற்ற குளிா்பானங்கள் கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன.

இதுதொடா்பாக 10 கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டு, தரமற்ற குளிா்பானங்களை விற்பனை செய்த 7 கடைகளுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் கோ.புதூா் பகுதியில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த குளிா்பானங்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி குறிப்பிடப்படவில்லை.

இதையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள மூன்று கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனா்.