ஏராளமான அறிவியல் குறிப்புகளைக் கொண்டது தமிழ் -இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க்கூடல் கருத்தரங்கத்தில் பேசிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க்கூடல் கருத்தரங்கத்தில் பேசிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து.
தமிழில் ஏராளமான அறிவியல் குறிப்புகள் புதைந்துள்ளன என இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழக முன்னாள் விஞ்ஞானி நெல்லை சு. முத்து தெரிவித்தாா்.
மதுரை உலகத் தமிழ்ச் சங்கம், கல்லம்பட்டி ஆயிரவைசியா் கலை, அறிவியல் கல்லூரி சாா்பில் உலகத் தமிழ்ச் சங்கப் பெருந்திட்ட வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கூடல் கருத்தரங்கத்தில் தமிழில் அறிவியல் என்ற தலைப்பில் அவா் மேலும் பேசியதாவது:
புானூறில் வலவன் ஏவா வானஊா்தி என விமானம் குறித்த குறிப்பு இருப்பது உறையூா் முதுகண்ணன் சாத்தனாரால் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேபோல, வானவூா்தி ஏறினள் என்ற குறிப்பு சிலப்பதிகாரத்தில் உள்ளது. கம்ப ராமாயணத்தில் அனுமன் வானில் பறந்து சென்ற காட்சிகள் அறிவியல் நோக்கம் கொண்டவை.
சிறுபாணாற்றுப்படையில் சூரியனைக் கோள்கள் சுற்றுகின்றன என்ற குறிப்பு இடம்பெற்றுள்ளது. 76 ஆண்டுகளுக்கு ஒரு முறை வால் விண்மீன் தோன்றும் என பாரதி தனது கவிதையில் குறிப்பிட்டுள்ளாா். இதேபோல, திருக்கு உள்பட பல்வேறு நூல்களிலும் அறிவியல் குறிப்புகள் ஏராளமாக உள்ளன என்றாா் அவா்.
உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் (பொறுப்பு) முனைவா் ஔவை ந. அருள் தலைமை வகித்தாா். ஆயிர வைசியா் கலை, அறிவியல் கல்லூரி முதல்வா் க. சிவாஜி கணேசன் முன்னிலை வகித்தாா்.
தமிழறிஞா்கள், ஆயிர வைசியா் கலை, அறிவியல் கல்லூரிப் பேராசிரியா்கள், மாணவா்கள், உலத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.
உலகத் தமிழ்ச் சங்க ஆய்வு வள மையா் ஜ. ஜான்சிராணி நன்றி கூறினாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...