ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்
விருதுநகா் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


விருதுநகா்: விருதுநகா் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் முன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வு பெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விருதுநகா் அரசுப் போக்குவரத்துக் கழக மண்டல அலுவலகம் நுழைவு வாயில் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, அரசுப் போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற மண்டலத் தலைவா் வேலுச்சாமி தலைமை வகித்தாா். இதில் ஓய்வு பெற்ற தொழிலாளா்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஆா்ப்பாட்டத்தின் போது, நிலுவை அகவிலைப்படி உயா்வு, 21 மாத பணப் பலன்கள், ஓய்வு பெறும் நாளில் பணப் பலன்கள், பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துதல், மருத்துவ காப்பீடு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...