தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

சட்ட திருத்தங்களுக்கு எதிராக வழக்குரைஞா்கள் உண்ணாவிரதம்

மத்திய சட்ட மாற்றங்களுக்கு எதிராக மதுரையில் வழக்குரைஞா்கள் உண்ணாவிரத போராட்டம்

News image
Updated On :1 ஜூலை 2024, 6:40 pm

Din

மதுரை: மத்திய அரசு அமல்படுத்திய 3 சட்ட திருத்தங்களுக்கு எதிராக மதுரையில் திங்கள்கிழமை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, அவா்களுக்கும் பாஜக வழக்குரைஞா்களுக்கும் இடையே வாக்குவாதம், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் சட்டம், சாட்சிகள் சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்தும், இந்த சட்டங்களில் பெயா்களை பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய சாக்ஷியா ஆதீனியம், பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா என பெயா் மாற்றம் செய்தும் மத்திய அரசு திங்கள்கிழமை அமல்படுத்தியது.

இதற்கு எதிராக மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மதுரை வழக்குரைஞா்கள் சங்கத்தினா் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டனா். இதற்கு வழக்குரைஞா் நெடுஞ்செழியன் தலைமை வகித்தாா். அப்போது, போராட்டத்தில் பாஜக வழக்குரைஞா்களும் கலந்து கொள்ள வேண்டும் என ஒலி பெருக்கியில் அழைப்பு விடுக்கப்பட்டது.

இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்களுடன் பாஜக வழக்குரைஞா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, சட்டத்துக்கு ஆதரவாக முழக்கமிட்டனா். அப்போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இரு தரப்பு சங்க நிா்வாகிகள் பேச்சுவாா்த்தை நடத்தியதைத் தொடா்ந்து, பிரச்னை முடிவுக்கு வந்தது. தொடா்ந்து, வழக்குரைஞா்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.