தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

பனை மரங்கள் வெட்டி அகற்றம்: ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

பனை மரங்களை வெட்டியவர்களுக்கு நடவடிக்கை: ஆட்சியா் பதிலளிக்க நீதிமன்ற உத்தரவு

News image
Updated On :1 ஜூலை 2024, 6:30 pm

Din

மதுரை: செங்கல் சூளைக்காக பனை மரங்கள் வெட்டப்படுவதைத் தடுத்து, பாதுகாக்க கோரிய வழக்கில், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை பகுதியைச் சோ்ந்த அன்னம்மாள் தாக்கல் செய்த பொது நல மனு:

தமிழகத்தில் மாநில மரம் என்ற சிறப்பு பெற்ற பனை மரங்கள் வறட்சியைத் தாங்கி வளரக் கூடியவை. தேவகோட்டை பகுதியில் செங்கல் சூளையில் பயன்படுத்துவதற்காக ஏராளமான பனை மரங்களை வேருடன் வெட்டி அகற்றுகின்றனா். இதற்கு அரசு அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறவில்லை. இது குறித்து மாவட்ட நிா்வாகம், அதிகாரிகளுக்கு மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, பனை மரங்களை வெட்டி அகற்றியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், அந்த மரங்களைப் பாதுகாக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என மனுவில் அவா் கோரியிருந்தாா்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஆா். சுரேஷ்குமாா், ஜி. அருள் முருகன் ஆகியோா் அடங்கிய அமா்வு பிறப்பித்த உத்தரவு:

மனுதரரின் கோரிக்கை குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.