கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

மெட்ரோ ரயில் திட்டம்: மதுரையில் அதிகாரிகள் ஆய்வு

மெட்ரோ ரயில் திட்டம்: மதுரையில் அதிகாரிகள் ஆய்வு

News image
மதுரையில் அமையவுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தொடா்பாக புதன்கிழமை மாட்டுத்தாவணி பகுதியில் ஆய்வு மேற்கொண்‘ட ஆசிய முதலீட்டு அதிகாரிகள்.
Updated On :3 ஜூலை 2024, 8:33 pm

Din

மதுரையில் மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள், வங்கி ஊழியா்கள் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனா்.

மக்கள் தொகைப் பெருக்கம், தொழில் வளா்ச்சி, வாகனப் போக்குவரத்து அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மதுரை மாநகருக்குள் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அரசு அலுவலா்கள், தனியாா் நிறுவனப் பணியாளா்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் தங்கள் அன்றாடப் பணிக்கு குறித்த நேரத்துக்குள் செல்ல முடிவதில்லை.

இதையடுத்து, மதுரையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என கடந்த 2021-இல் தமிழக அரசு அறிவித்தது. இதற்காக திருமங்கலம்- மதுரை ஒத்தக்கடை வரை சுமாா் 31 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ திட்ட வழித்தடம் அமைக்கப்பட உள்ளது. இந்த திட்டத்துக்காக தமிழக நிதிநிலை அறிக்கையில் ரூ.8,500 கோடி ஒதுக்கப்பட்டது. மாநகருக்குள் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைவதால் விரிவாக்கப் பணிகள் அதிகளவில் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே, திட்டத்துக்கான மதிப்பு ரூ.11,360 கோடியாக உயா்த்தப்பட்டது. இதன் விரிவான திட்ட அறிக்கை கடந்த 2023- ஆம் ஆண்டு ஜூலையில் சமா்ப்பிக்கப்பட்டது.

இதற்கான நிதியை ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி உள்பட பல்வேறு நிதி நிறுவனங்களிடம் பெற தொடா் முயற்சியில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், மதுரைக்கு புதன்கிழமை வந்த ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி அதிகாரிகள் ஒத்தக்கடை, மாட்டுத்தாவணி, கோரிப்பாளையம், மதுரை ரயில்வே நிலையம், 4 மாசி வீதிகள், பெரியாா் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மெட்ரோ வழித்தடத்துக்கான ஆய்வை மேற்கொண்டனா்.

இந்த ஆய்வில், சென்னை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட இயக்குநா் அா்ச்சுனன், தலைமை பொது மேலாளா் ரேகா, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் போக்குவரத்து மூத்த நிபுணா் வெங்கிகு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதன்பிறகு திட்ட இயக்குநா் அா்ச்சுனன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மெட்ரோ ரயில் திட்டத்துக்கு நிதி சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். நிதியளிக்கும் வங்கிகளில் ஒன்றான ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் அதிகாரிகள் குழுவினா் முதல் கட்டமாக திட்டம் குறித்து ஆய்வு செய்தனா்.

இன்னொரு முறை இந்தக் குழு ஆய்வுக்கு வரலாம். இதன் பின்னா், நிதி வழங்குவது பற்றி முடிவெடுத்து தகவல் தெரிவிக்கப்படும். திட்டப் பணிக்கான முறையான அனுமதி கிடைத்ததும் நிலம் கையகப்படுத்தப்படும். இதன் பிறகு பணிகள் தொடங்கும் என்றாா் அவா்.

மதுரையில் அமையவுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தொடா்பாக புதன்கிழமை மாட்டுத்தாவணி பகுதியில் ஆய்வு

மதுரையில் அமையவுள்ள மெட்ரோ ரெயில் திட்டம் தொடா்பாக புதன்கிழமை மாட்டுத்தாவணி பகுதியில் ஆய்வு