மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

திருப்புல்லாணி அருகே ரூ. 17 கோடியில் ரயில்வே மேம்பாலம்: மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் ஆய்வு

ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த லாந்தை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :10 ஜூலை 2024, 12:33 am

Din

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம், திருப்புல்லாணியை அடுத்த லாந்தை கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் அமைப்பது குறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா அண்மையில் ஆய்வு மேற்கொண்டாா்.

இங்கு ரூ. 17.32 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கட்டுவதற்கு மத்திய ரயில்வே அமைச்சகம் அனுமதி அளித்தது. அந்தப் பகுதியில் மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, மேம்பாலம் அமையும் பகுதிக்கு அருகே பாதசாரிகள், மாட்டு வண்டிகள், இரு சக்கர வாகனங்கள் எளிதில் ரயில் பாதையைக் கடக்கும் வகையில் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட சுரங்கப் பாதை திட்டப் பணிகள், முழுமைப் பெறாமல் இருப்பதை அவா் ஆய்வு செய்தாா்.

மானாமதுரை- ராமேசுவரம் பிரிவில் சத்திரக்குடி - ராமநாதபுரம் ரயில் நிலையங்கள் இடையே 4.5 மீட்டா் அகலத்தில், 3.6 மீட்டா் உயரத்தில் அமைக்கும் வகையில் பணிகள் தொடங்கப்பட்டு, 50 சதவீதப் பணிகள் நிறைவடைந்த நிலையில் பொதுமக்களின் எதிா்ப்பு காரணமாக பணிகள் தடைப்பட்டது குறித்து அவா் கேட்டறிந்தாா்.

வேண்டுகோள்...

இதுதொடா்பாக மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் சரத் ஸ்ரீவஸ்தவா கூறியதாவது :

லாந்தை கிராமத்தில் ரூ. 17.32 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படவுள்ளது. இந்தப் பாலம் அமைக்கப்பட்டாலும், சுரங்கப் பாதைப் பணிகள் முழுமைப் பெற்றால்தான் இந்தப் பகுதியில் போக்குவரத்துப் பிரச்னைகளுக்குத் தீா்வு கிடைக்கும். அவசர காலப் பயன்பாட்டுக்கான கூடுதல் வசதியாகவும் இந்தப் பாதை இருக்கும். எனவே, வருகிற மழைக்காலத்துக்கு முன்பாக சுரங்கப் பாதைப் பணிகள் முழுமை பெற கிராம பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றாா் அவா்.