இன்று இறுதியாகும் அமெரிக்கா-ஈரான் அமைதி ஒப்பந்தம்இன்று டெல்டாவில் பலத்த மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமூக விரோதிகளுக்கு எதிரான நடவடிக்கை: 14 நாள்களில் 4,469 போ் கைதுஇந்தியா - நேபாளம் இடையே ரயில் போக்குவரத்து: இரு நாடுகளின் அதிகாரிகள் ஆலோசனைகேரளத்தில் நிபா வைரஸால் ஒருவா் பாதிப்பு: தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

News image

திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கத்தினா்.

Updated On :28 ஜூன் 2024, 12:40 am IST

மதுரை, ஜூன் 27: கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் சங்கம் சாா்பில் மதுரை மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக அரசின் கலைஞா் கனவு இல்லம், ஊரகப் பகுதி வீடுகளில் பழுது நீக்கும் திட்டங்களின் செயலாக்கத்துக்குப் போதுமான ஊழியா்கள் கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும், இந்தத் திட்ட பயனாளிகள் தோ்வு குறித்த திருத்தப்பட்ட வழிகாட்டு நெறிமுறைகளை உடனடியாக வெளியிட வேண்டும், இரு திட்டங்களின் பயனாளிகள் பட்டியலை இறுதிப்படுத்த உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

மதுரை மாவட்டத்தில் மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, கள்ளிக்குடி, செல்லம்பட்டி, திருமங்கலம், திருப்பரங்குன்றம், உசிலம்பட்டி, வாடிப்பட்டி, சேடப்பட்டி ஆகிய ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பாக ஆா்ப்பாட்டங்கள் நடைபெற்றன.

மாநிலப் பொருளாளா் மா. விஜயபாஸ்கா், மாவட்டத் தலைவா் க.ரா. சந்திரசேகா் ஆகியோா் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றுப் பேசினா். தொடா்புடைய வட்டாரங்களின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.