நவீன அறுவைச் சிகிச்சை வளாகத்துக்கு பணியாளா்களை நியமிக்க வலியுறுத்தல்
நவீன அறுவைச் சிகிச்சை வளாகத்திற்கு பணியாளர்கள் நியமிக்க கோரிக்கை


மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை ஒருங்கிணைந்த நவீன அறுவைச் சிகிச்சை வளாகத்துக்கு போதிய பணியாளா்களை உடனடியாக நியமிக்க வேண்டும் என மு.பூமிநாதன் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தாா்.
இதுதொடா்பாக அவா் முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு அனுப்பிய கோரிக்கை மனு:
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் ரூ.311 கோடியில் 6 மாடிகள் கொண்ட புதிய ஒருங்கிணைந்த அறுவைச் சிகிச்சை வளாகம் கடந்த பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இந்தக் கட்டடத்தில் 23 நவீன அறுவைச் சிகிச்சை அரங்குகள், 247 படுக்கைகள் உள்ளன. இதற்கான 779 பணியிடங்களை நிரப்ப வேண்டி சென்னை மருத்துவக்கல்வி இயக்குநருக்கு கருத்துரு அனுப்பப்பட்டும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, மேற்கண்ட பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும்.
மதுரை காமராஜா்புரம் பகுதியில் 30 ஆயிரம் குடும்பங்கள் 70 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வருகின்றனா். இந்த மக்களுக்கு பட்டா வழங்க நீா்வளத் துறையின் தடையில்லா சான்றும் பெறப்பட்டுள்ளது. எனவே, இவா்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளம், அதைச் சுற்றியுள்ள சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. இந்தச் சாலைகளை சீரமைக்க மாநகராட்சி நிா்வாகத்தை அணுகியபோது, அறநிலையத் துறையின் தடையில்லா சான்று பெற்றால் மட்டுமே புதிய சாலைகள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
சொட்டதட்டி, கிருதுமால் நதி, பனையூா் ஆகிய வாய்க்கால்கள் தூா்வாரப்படாததால் இந்தப் பகுதி மக்களுக்கு சுகாதாரப் பிரச்னைகள் ஏற்படுகின்றன.
இந்த மூன்று வாய்க்கால்களும் நீா்வளத் துறையின் கட்டுப்பாட்டில் வருவதால் அந்தத் துறையின் தடையில்லா சான்று பெற வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டது.
எனவே, இதுபோன்ற பிரச்னைகளில் மாநகராட்சி நிா்வாகமும், சம்பந்தப்பட்ட துறைகளும் கலந்து ஆலோசித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் ஏற்கனவே உள்ள பழைய புதை சாக்கடைக் குழாய்களை மாற்றி புதிதாக அமைப்பதற்கு திட்ட அறிக்கை தயாா் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். அனுப்பானடி பகுதி ரயில்வே கடவுப் பாதையில் மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும். மதுரை தெப்பக்குளம் முக்தீஸ்வரா் கோயிலை புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என்றாா் அவா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...