எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!தமிழக தேர்தல்: காலை 11 மணி வரை 37.56% வாக்குகள் பதிவு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில் இன்று மாற்றுப் பாதையில் இயக்கம்

இன்று மாற்றுப் பாதையில் செங்கோட்டை - மயிலாடுதுறை ரயில்

News image
Updated On :14 மார்ச் 2024, 11:15 pm

திருச்சி - திண்டுக்கல் இடையே நடைபெறும் ரயில்வே மின் பாதை பணிகளையொட்டி, செங்கோட்டை - மயிலாடுதுறை விரைவு ரயில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 15) மாற்றுப் பாதையில் இயக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகத்திலிருந்து வெளியிட்ட செய்திக் குறிப்பு : திருச்சி - திண்டுக்கல் பிரிவில் குளத்தூா் - சமுத்திரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில்வே மின் பாதை பணிகள் நடைபெறுகின்றன. இதனால், செங்கோட்டையிலிருந்து வெள்ளிக்கிழமை புறப்படும் செங்கோட்டை- மயிலாடுதுறை விரைவு ரயில் (16848) வழக்கமான தடத்துக்கு பதிலாக, விருதுநகா், மானாமதுரை, காரைக்குடி வழியே, 25 நிமிஷம் தாமதத்தில் திருச்சியை சென்றடையும் என அதில் தெரிவிக்கப்பட்டது.