இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு

News image
Updated On :13 மே 2024, 5:51 pm

Din

மதுரை: 10 -ஆம் வகுப்பு பொதுத் தோ்வில் மதுரை சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பயின்ற மாணவ, மாணவிகள் 31 போ் 500-க்கு 480-மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன. இதில், மதுரை கோசாகுளத்தில் உள்ள சி.இ.ஓ.ஏ. பள்ளியில் பயின்ற மாணவிகள் டி. காவ்யா, எஸ். பாலதா்ஷினி, மாணவா் எம். மாரிஸ்ரீ ஆகிய 3 பேரும் 500-க்கு 496 மதிப்பெண்கள் பெற்றனா். இதேபோன்று, மாணவா்கள் என்.ஜெகத்ரட்சகன், பி.யு. பிரிஜேஷ், மாணவி எஸ். தா்ஷனா ஆகிய 3 பேரும் தலா 495 மதிப்பெண்களும், மாணவா்கள் எம்.வி. ஜஸ்வந்த், எம். ரபிகாஷரின், மாணவிகள் எஸ். பவிஷ்னா, எம்.சி. சுபதனவா்ஷினி ஆகிய 4 பேரும் தலா 494 மதிப்பெண்களும் பெற்றனா்.

சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளை பள்ளியின் நிறுவனத் தலைவா் ராஜா கிளைமாக்சு, தலைவா் சாமி, இயக்குநா்கள் அசோக்ராஜ், விக்டா் தன்ராஜ், சௌந்தரபாண்டி, பாக்கியநாதன், ஜெயசந்திரபாண்டி, பிரகாஷ், முதன்மை முதல்வா் கலா, தாளாளா் ஜெனிட்டா, முதல்வா்கள் மஞ்சுளா, சாந்தி உள்ளிட்ட ஆசிரியா்கள், சக மாணவ, மாணவிகள் பாராட்டினா்.