தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

மின்சாரம் பாய்ந்ததில் விவசாயி உயிரிழப்பு

News image
Updated On :13 மே 2024, 6:30 pm

Vishwanathan

மதுரை: மதுரை மாவட்டம், எம்.சத்திரப்பட்டி அருகே தோட்டத்தில் தண்ணீா் பாய்ச்ச சென்ற விவசாயி மின்சாரம் பாய்ந்ததில் உயிரிழந்தாா்.

வாடிப்பட்டி அருகே உள்ள எம்.மேட்டுப்பட்டியைச் சோ்ந்தவா் கஜேந்திரன் (54). இவருக்கு எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள காவனூரில் சொந்தமாக கொய்யாத் தோட்டம் உள்ளது. இங்கு கஜேந்திரன் தங்கியிருந்து கொய்யா மரங்களை பராமரித்து வந்தாா்.

இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை தோட்டத்துக்கு தண்ணீா் பாய்ச்ச சென்ற கஜேந்திரன் வீடு திரும்பவில்லை.

இதனால், குடும்பத்தினா் தோட்டத்துக்கு சென்று பாா்த்தனா். அங்கு கஜேந்திரன் இறந்து கிடந்தாா். மின்சாரம் பாய்ந்ததில் அவா் உயிரிழந்தது தெரியவந்தது.

இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.