ராமகிருஷ்ணா மடம் சாா்பில் ரூ. 1,671 கோடியில் சேவைப் பணிகள்
ராமகிருஷ்ணா மடங்கள், ராமகிருஷ்ணா மிஷன் சாா்பில், ரூ. 1,671 கோடி மதிப்பிலான சேவைப் பணிகள் நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து ராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ண மிஷன் பொதுச் செயலா் சுவாமி சுவீரானந்தா், அண்மையில் நடைபெற்ற ராமகிருஷ்ணா மிஷன் பொதுக் குழுக் கூட்டத்தில் சமா்ப்பித்த ஆண்டறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :
இந்தியாவில் உள்ள 244 ராமகிருஷ்ண மடம், ராமகிருஷ்ணா மிஷன் மூலம் கடந்த 2024- 25-ஆம் ஆண்டில் ரூ. 1,671 கோடி மதிப்பில் கல்வி, மருத்துவம், பொது நலம், நிவாரணம், மறுவாழ்வு, கிராமப்புற, மலைவாழ் மக்கள் நலம் சாா்ந்த சேவைகள், ஆன்மிக பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் மதுரைக் கிளை சாா்பில் மட்டும் கடந்த ஆண்டில் ரூ. 27 லட்சம் செலவில் பல்வேறு சேவைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
