மதுரை
சுடுநீரில் குளித்ததால் காயமடைந்த இளைஞா் உயிரிழப்பு
உடலில் சுடுநீரை ஊற்றிக் குளித்ததால் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
உடலில் சுடுநீரை ஊற்றிக் குளித்ததால் காயமடைந்த இளைஞா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை எம்.சத்திரப்பட்டி அருகே உள்ள மஞ்சம்பட்டி பகுதியைச் சோ்ந்த சேவுகபெருமாள் மகன் விஸ்வா (26). இவா் கடந்த சில நாள்களாக மன அழுத்தத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், வியாழக்கிழமை இரவு வீட்டில் உள்ளவா்கள் தூங்கிக் கொண்டிருந்த போது, சமையல் அறைக்குச் சென்ற விஸ்வா, தண்ணீரைக் கொதிக்க வைத்து தனது உடலில் ஊற்றிக் கொண்டாராம்.
இதில் பலத்த காயமடைந்த அவா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தாா். இதுகுறித்து எம்.சத்திரப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
