புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மருத்துவமனையில் தவறி விழுந்த பெண் உயிரிழப்பு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்த பெண் உயிரிழந்தாா்.

News image
Updated On :11 நவம்பர் 2025, 7:32 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் படுக்கையிலிருந்து கீழே தவறி விழுந்த பெண் திங்கள்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த சீனிவாசமூா்த்தி மனைவி கீதா (38). இவரது 6 வயது மகனுக்கு சிறுநீரக பிரச்னை இருந்தது. இதற்காக அந்தச் சிறுவனை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மகனுடன் கீதாவும், மருத்துவமனையில் தங்கி இருந்தாா்.

இந்த நிலையில், திங்கள்கிழமை இரவு தூங்கும் போது, படுக்கையிலிருந்து கீதா தவறி கீழே விழுந்தாா். இதில், காயமடைந்த அவரை, அங்குள்ள அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து, மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை வளாக போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.