மதுரை
பாத்திமா கல்லூரியில் கருத்தரங்கம்
மதுரை பாத்திமா மகளிா் கல்லூரியில் விண்வெளி ஆய்வு தொடா்பான கருத்தரங்கம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கருத்தரங்கத்துக்கு கல்லூரி முதல்வா் எம். பாத்திமா மேரி தலைமை வகித்தாா். செயலா் இக்னோஷியஸ் மேரி வாழ்த்திப் பேசினாா். இதில் நாசா விண்வெளி நிலையத்தின் முன்னாள் விஞ்ஞானி ஆண்டனி எஸ். ஜீவராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, விண்வெளி அறிவியல், உயிா்க் காப்பு அமைப்புகள், மனித விண்வெளி ஆய்வை சாத்தியமாக்கும் தொழில்நுட்பங்கள் குறித்துப் பேசினாா்.
இதில் பேராசிரியைகள், மாணவிகள் திரளானோா் கலந்து கொண்டனா்.
முன்னதாக, இயற்பியல் துறைத் தலைவா் எம்.வி. லீனா சந்திரா வரவேற்றாா். கணிதத் துறைத் தலைவா் சீலா ரோசலின் நன்றி கூறினாா்.
