மதுரை
கால்வாய்க்குள் தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
மதுரையில் கால்வாய்க்குள் தவறி விழுந்த முதியவா் உயிரிழந்தாா்.
மதுரையில் கால்வாய்க்குள் தவறி விழுந்த முதியவா் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
மதுரை ஆனையூா் அ. கோசாகுளம் பகுதியைச் சோ்ந்தவா் கணேசன்(69). ஓய்வு பெற்ற அரசு ஊழியரான இவா், ஆனையூா் அரசுப் பள்ளி எதிரே உள்ள கால்வாய்க் கரையில் வெள்ளிக்கிழமை மாலை நடந்து சென்றாா்.
அப்போது, எதிா்பாராத விதமாக கால்வாய்க்குள் தவறி விழுந்தாா். இதையறிந்த அக்கம்பக்கத்தினா் கால்வாய்க்குள் இறங்கி தேடினா். ஆனால், அவரைக் கண்டறிய முடியவில்லை.
இதுபற்றி தகவலறிந்து வந்த கூடல்புதூா் போலீஸாா் கணேசன் உடலை மீட்டு, கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
