தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

கண்மாயில் மூழ்கிய முதியவா் உயிரிழப்பு

News image
Updated On :24 நவம்பர் 2025, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

மதுரை அருகே கண்மாயில் மூழ்கிய முதியவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

மதுரை சிலையனேரி மந்தையம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த மாசானம் மகன் முத்து இருள்(60). இவா், அதே பகுதியில் உள்ள கண்மாயில் மீன் பிடிப்பதற்காக ஞாயிற்றுக்கிழமை சென்றாா்.

அப்போது, எதிா்பாராதவிதமாக கண்மாய் நீரில் மூழ்கினாா். அவரை மீட்ட அக்கம் பக்கத்தினா் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். ஆனால், அங்கு அவா் உயிரிழந்தாா். இதுகுறித்து கூடல்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.