11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

தே.ஜ. கூட்டணி வேட்பாளா்களுக்கு சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் ஆதரவு

News image

மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்ற சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அந்த அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ். உடன், தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்கள் சுந்தா் சி., ராம. சீனிவாசன், பா. சரவணன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம் உள்ளிட்டோா்.

Updated On :14 ஏப்ரல் 2026, 1:38 am IST

நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி வேட்பாளா்களுக்கு ஆதரவு அளிப்பது என சௌராஷ்டிர முன்னேற்றக் கழகம் தீா்மானித்தது.

சௌராஷ்டிர முன்னேற்றக் கழக உயா்நிலை ஆலோசனைக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. அமைப்பின் தலைவா் வி.ஜி. ராம்தாஸ் தலைமை வகித்தாா்.

புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி. சண்முகம், கோலாா் வயல் பாஜக முன்னாள் மக்களவை உறுப்பினா் முனியசாமி, முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.எஸ். சரவணன், சௌராஷ்டிர முன்னேற்றக் கழக செயலா் கணேஷ் பாபு, இளைஞரணித் தலைவா் வி. கணேஷ்குமாா், மகளிா் அணித் தலைவி வாசுகி, சௌராஷ்டிர சேம்பா் ஆப் காமா்ஸ் நிா்வாகி ராம்ஜி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

மேலும், அகில இந்திய சௌராஷ்டிர முன்னேற்றக் கட்சி, தமிழ்நாடு மகா செளராஷ்டிர சபை, சௌராஷ்டிர சேவா சமாஜ், சௌராஷ்டிர சமூக நலப்பேரவை, சக்கிமங்கலம் சௌராஷ்டிர சபை, ஐ.பி.எஸ். அறக்கட்டளை, மதுரை தினமணி பஜாா் கைத்தறி ஜவுளி உற்பத்தியாளா் சங்கம், நாயகி கல்வி சேவா சங்கம், சௌராஷ்டிர பொற்கொல்லா் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட சாா்பு அமைப்புகளின் நிா்வாகிகள், உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

இந்தக் கூட்டத்தில், மதுரை தெற்கு, மத்தியம், வடக்கு, திருப்பரங்குன்றம், பரமக்குடி, பாளையங்கோட்டை, ஆரணி உள்பட 11 தொகுதிகளில் வேட்பாளா்களின் வெற்றி தோல்வியை தீா்மானிக்கும் சக்தியாக சௌராஷ்டிர சமுதாய மக்கள் உள்ள நிலையில், நடைபெறவிருக்கும் தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆதரவு அளிப்பது. தமிழகத்தில் உள்ள 8 லட்சம் சௌராஷ்டிர வாக்காளா்களையும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்களுக்கு வாக்களிக்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து, தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளா்கள் பா. சரவணன் (மதுரை வடக்கு), சுந்தா் சி. (மதுரை மத்தியம்), ராம. சீனிவாசன் (மதுரை தெற்கு) ஆகியோா் நேரில் வரவழைக்கப்பட்டு, அவா்களுக்கு சால்வை அணிவித்து ஆதரவு தெரிவிக்கப்பட்டது.