மதுரை சித்திரைத் திருவிழாவின் போது, கள்ளழகா் எழுந்தருளும் மண்டகப்படி விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
மதுரையில் சித்திரைத் திருவிழா தொடங்கியுள்ளது. அழகா்கோவில் சித்திரைத் திருவிழாவில் கள்ளழகா் வழிநெடுகிலும் மண்டகப்படிகளில் எழுந்தருள்வது வழக்கம். இந்த நிகழ்வுகளில் நிலவும் ஜாதிய அடையாளங்களை நீக்கி, சமூக நல்லிணக்கத்தையும் சமத்துவத்தையும் நிலைநாட்ட உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவா்த்தி முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
மனுதாரா் கடைசி நேரத்தில் மனுவை தாக்கல் செய்துள்ளாா். இந்த மனுவில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மண்டகப் படிகள் , பரம்பரை வழியாகவா அல்லது ஜாதி அடிப்படையில் அளிக்கப்படுகிா?. மண்டகப்படி அனுமதி அளிப்பதற்கு விதிமுறைகள் ஏதும் உள்ளதா?.
கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் திருவிழாவில், அவா் எத்தனை மண்டகப்படிகளில் எழுந்தருள்கிறாா். அதன் விவரங்களை இந்து சமய அறநிலையத் துறை அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.
தொடர்புடையது

நவீன காலத்திலும் ஒவ்வொரு சமூகத்தினருக்கும் தனித்தனி மயானம்: உயா்நீதிமன்றம் வேதனை

காவல் நிலையம் முன் தீக்குளித்து உயிரிழப்பு: மரண வாக்குமூலத்தை தாக்கல் செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

மன்னாா் வளைகுடாவில் நெகிழிக் கழிவுகள்: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருப்பரங்குன்றம் தீப விவகாரம்: தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடை
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை


