மதுரை சித்திரைத் திருவிழாவில் பொதுமக்களுக்குத் தேவையான உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அதிமுக மருத்துவரணி இணைச் செயலா் மருத்துவா் பா.சரவணன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மதுரையில் உலகப் புகழ் பெற்ற சித்திரைத் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஏப்.28) திருக்கல்யாண வைபவமும், தேரோட்டமும், வருகிற மே 1-ஆம் தேதி வைகை ஆற்றில் கள்ளழகா் இறங்கும் வைபமும் நடைபெறவுள்ளன.
இதில் தமிழ்நாடு மட்டுமல்லாது வெளி மாநிலங்களிலிருந்தும் பொதுமக்கள் கலந்து கொள்வா். மதுரையில் தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், திருவிழாவுக்கு வருகை தரும் பொதுமக்களுக்குத் தேவையான மருத்துவ முகாம்கள், குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கள்ளழகா் வைகை ஆற்றில் இறங்கும் வைபவத்தின் போது போதுமான அளவில் காவல் துறையினரை பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்த வேண்டும்.
மேலும், பொதுமக்களிடையே பிரசாரங்கள் மூலம் விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும். சித்திரைத் திருவிழா பொதுமக்களுக்கு பாதுகாப்பான திருவிழாவாக அமைய உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.
தொடர்புடையது

தூத்துக்குடி சிவன் கோயில் சித்திரைத் திருவிழா: ஏப்.30-ல் தேரோட்டம்!

கொம்மடிக்கோட்டை கோயிலில் சித்திரைத் திருவிழா

சித்திரைத் திருவிழா: வைகை அணையிலிருந்து நீர் திறப்பு!

மதுரை கள்ளழகர் சித்திரைத் திருவிழா: முகூர்த்தக்கால் நடும் விழா கோலாகலம்!
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


