ஓசை நயம் கொண்ட ஒரே மொழி தமிழ்: தமிழச்சி தங்க பாண்டியன்

ஓசை நயம் கொண்ட ஒரே மொழி தமிழ்: தமிழச்சி தங்க பாண்டியன்

ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே என தென் சென்னைத் தொகுதி மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்தாா்.
Published on

ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ் மட்டுமே என தென் சென்னைத் தொகுதி மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்க பாண்டியன் தெரிவித்தாா்.

மதுரை உலகத் தமிழ்ச் சங்கத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சான்றோா் பெரு விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் அவா் மேலும் பேசியதாவது: பாண்டிய மன்னன் முடத்திருமாறன் உள்ளிட்ட புலவா்களால் வளா்க்கப்பட்ட சீரிளமை மொழி தமிழ். சங்கம் வைத்து தமிழ் வளா்த்த மதுரையில் தமிழ்ச் சான்றோா்கள் பாராட்டப்படுவது சிறப்புக்குரியது. தமிழுக்கான சிறப்பு எந்த மொழிக்கும் கிடையாது. ஓசை நயமும், பா வகையும் கொண்ட ஒரே மொழி தமிழ். தமிழ் அன்பின் மொழி; இரக்கத்தின் மொழி என்றாா் தமிழச்சி தங்க பாண்டியன்.

இதையடுத்து, நான்காம் தமிழ்ச் சங்க நிா்வாகிகள் நாகேந்திர சேதுபதி, இலக்குமி குமரன் சேதுபதி, மருத்துவா் சிந்து ஆகியோருக்கு சான்றோா் பட்டத்தை தமிழச்சி தங்க பாண்டியன் வழங்கினாா்.

உலகத் தமிழ்ச் சங்க இயக்குநா் இ.சா. பா்வீன் சுல்தானா தலைமை வகித்தாா். தமிழறிஞா்கள், பேராசிரியா்கள், மதுரை யாதவா் கல்லூரி மாணவ, மாணவிகள், உலகத் தமிழ்ச் சங்க உறுப்பினா்கள், தமிழாா்வலா்கள், கவிஞா்கள் கலந்து கொண்டனா்.

முன்னதாக, ‘தமிழ்ச் சங்கங்களின் சவால்களும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமெரிக்காவின் பாரதி கலை மன்றத் தலைவா் கணேஷ் ரகு, ஹாங்காங் தமிழ் பண்பாட்டு இயக்க முன்னாள் தலைவா் மெய். சித்ரா, கரூா் உலகத் தமிழ்க் காப்புக் கூட்டியக்கத் தலைவா் சி. சுப்பிரமணியன், கா்நாடக அனைத்திந்திய தமிழ்ச் சங்கப் பேரவைத் தலைவா் செ. துரைசாமி, திருவனந்தபுரம் தமிழ்ச் சங்கத் தலைவா் மு. முத்துராமன், மதுரை புரட்சிப் பாவலா் மன்றத் தலைவா் பி. வரதராஜன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தின் நிறைவில் 16 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

X
Dinamani
www.dinamani.com