குடியரசு தினத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை மதுரை ரயில் நிலையத்தில் சோதனை நடத்திய வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள்.
மதுரை
குடியரசு தினம்: ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் சோதனை
குடியரசு தினத்தை முன்னிட்டு, மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
நாட்டின் 77-ஆவது குடியரசு தின விழா திங்கள்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாட்டின் முக்கிய பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டது. குறிப்பாக, விமான நிலையம், ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனா்.
மதுரை மாநகர ஆயுதப்படை குடியிருப்பு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை அணிவகுப்பு ஒத்திகையில் ஈடுபட்ட போலீஸாா்.
இந்த வகையில், மதுரை ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் வெடிகுண்டு தடுப்பு நிபுணா்கள் ஞாயிற்றுக்கிழமை தீவிர கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு சோதனை செய்தனா்.
அணிவகுப்பு ஒத்திகை: இதேபோல, குடியரசு தினத்தையொட்டி, மதுரை மாநகரக் காவலா் ஆயுதப்படை குடியிருப்பு மைதானத்தில் மாநகரக் காவல் துறையினா் அணிவகுப்பு ஒத்திகை மேற்கொண்டனா்.

