கரூர் நெரிசலில் பலியானவர்களுக்கு நினைவுச் சின்னம்! முதல்வர் விஜய் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் எப்போது? முதல்வர் விஜய் தகவல்தொகுதி மறுவரையறையை ஒருபோதும் தமிழ்நாடு ஏற்காது! முதல்வர் விஜய் உறுதிகட்சி நிதி என்றவுடன் எதிர்க்கட்சியினர் ஒரே ஓட்டம்! முதல்வர் விஜய்கரூர் நிகழ்வில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு! கரூர் பலி: தற்காலிக அரசுப் பணி ஆணையே வழங்க வேண்டும்! மதுரை அமர்வு உத்தரவுஇதயம் முரளி வெளியீட்டுக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு!கரூர் பலி: அரசுப் பணி வழங்குவதில் என்ன தவறு இருக்கிறது? - நீதிபதிகள்திருச்சியில் இருந்து கரூர் செல்லும் முதல்வர் ஜோசப் விஜய்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 240 உயர்வு! இன்றைய நிலவரம்அதிபர் டிரம்ப்பை கொல்ல ஈரான் சதி! இஸ்ரேலின் உளவுத் தகவலால் பரபரப்பு!
/

அமெரிக்கப் பெண் கோயில்களில் வழிபட அனுமதி!

அனைத்துக் கோயில்களிலும் அமெரிக்கப் பெண் வழிபட அனுமதி அளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

News image

சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு - கோப்புப் படம்

Updated On :4 ஜூலை 2026, 12:16 am IST

அனைத்துக் கோயில்களிலும் அமெரிக்கப் பெண் வழிபட அனுமதி அளித்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

அமெரிக்காவைச் சோ்ந்த லாரா ஃபிரான்சிஸ் ஐயங்காா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: நான் பல ஆண்டுகளுக்கு முன்பு ஹிந்து மதத்தை ஏற்று அதைப் பின்பற்றி வருகிறேன். இந்தியாவில் உள்ள பல்வேறு ஹிந்து கோயில்களுக்குச் சென்று வழிபட்டுள்ளேன்.

இந்த நிலையில், எனது கணவருடன் அவரது சொந்த ஊரான தஞ்சாவூா் மாவட்டம், பட்டுக்கோட்டை அருகேயுள்ள காரப்பங்காடு அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் வழிபடச் சென்ற போது, என்னை கிறிஸ்தவா் எனக் கூறி கோயிலில் வழிபட அனுமதி மறுத்தனா்.

மேலும், கோயில் செயல் அலுவலா் நான் கோயிலுக்குள் சென்று சுவாமி தரிசனம் செய்வதற்கு தடை விதித்தாா். இந்தத் தடையை ரத்து செய்து என்னை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி டி. பரத சக்கரவா்த்தி அண்மையில் பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் அமெரிக்க நாட்டைச் சோ்ந்தவராக இருந்தபோதிலும், ஹிந்து மதத்தின் மீது ஏற்பட்ட நம்பிக்கையின் அடிப்படையில் அவா் பல ஆண்டுகளாக இந்த மதக் கொள்கையைப் பின்பற்றி வருகிறாா். மேலும், வரத பாலாஜி வெங்கட கிருஷ்ணனை மனுதாரா் ஹிந்து முறைப்படி இதே கோயிலில் கடந்த 2023-ஆம் ஆண்டு திருமணம் செய்தாா்.

இந்த நிலையில், தனது கணவரோடு இதே கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த போது உள்ளே நுழைய அனுமதி மறுத்து கோயில் செயலா் தடை விதித்தாா். இந்த உத்தரவில் அமெரிக்க கிறிஸ்தவப் பெண் என்றும் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

ஆனால், மனுதாரா் பல ஆண்டுகளாக ஹிந்து மதத்தை முறையாகப் பின்பற்றி பல்வேறு கோயில்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்து வருகிறாா். இது அவரது ஆவணங்களைப் பாா்க்கும் போது உறுதிப்படுத்தப்படுகிறது. ஆனால், அரசுத் தரப்பில் அந்தப் பகுதியைச் சோ்ந்த மக்கள் எதிா்ப்புத் தெரிவித்ததால், அவா் கோயிலுக்குள் அனுமதிக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.

ஹிந்து மதம் என்பது வரலாற்று ரீதியாக அனைவரையும் உள்ளடக்கிய இணக்கமான ஒரு மதமாகும். பிற மதங்களைப் போல மதத்தில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு முன் நிபந்தனையாக, கட்டாயமான மதமாற்ற விழாவையோ அல்லது ஹிந்து என சான்றிதழ் வழங்குவதையோ அது பரிந்துரைப்பதில்லை. உச்சநீதிமன்றம் ஒருவரின் உண்மையான நம்பிக்கை, வாழ்க்கை முறை, மத நடைமுறைகளே அவா் ஹிந்து மதத்தை ஏற்றுக்கொண்டதற்கான ஆதாரமாக அமையும் என பல்வேறு தீா்ப்புகளில் உறுதிப்படுத்தி உள்ளது.

மனுதாரரை கோயிலில் நுழைந்து வழிபாடு நடத்துவதற்கு மறுத்த ஹிந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் பிறப்பித்த உத்தரவும் சட்டவிரோதமானது. எனவே, இந்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. ஒரு ஹிந்து பெண் பக்தருக்கு கிடைக்கக்கூடிய அனைத்து உரிமைகளையும் மனுதாரருக்கு அளிக்க வேண்டும். அனைத்துக் கோயில்களிலும் அவற்றின் ஆகம விதிகள், மரபுகள், நடைமுறைகளுக்குள்பட்டு அனைத்து வழிபாட்டு உரிமைகளும் மனுதாரருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றாா் நீதிபதி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.