கரப்பான்பூச்சி ஜனதா கட்சியுடன் பேச்சுவார்த்தைக்குத் தயார்: ஜெ.பி. நட்டாசிஜேபி போராட்டத்தால் மூடப்பட்ட தில்லி மெட்ரோ ரயில் நிலையங்கள் மீண்டும் திறப்பு!காவல் துறை முதல்வர் ஜோசப் விஜய்யின் ஏவல் துறையாக மாறியுள்ளது: நயினார் நாகேந்திரன்கரப்பான்பூச்சியின் பின்னால் நிற்கும் நிலை ராகுல் காந்திக்கு! நயினார் நாகேந்திரன் பேட்டிநீட் போராட்டம்: திமுக தொடங்கியது; 10 ஆண்டுகளுக்குப் பிறகு தில்லியில் தொடர்கிறது! கனிமொழி மக்களவை உறுப்பினர் பதவியிலிருந்து கல்யாண் பானர்ஜி இடைநீக்கம்!கச்சா எண்ணெய் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 715 புள்ளிகளும், நிஃப்டி 24,000 புள்ளிகளுக்குக் கீழே வர்த்தகம்!சிஜேபி போராட்டம்! பேச்சு நடத்துவதில் தாமதம் ஏன்? பாஜகவுக்கு அண்ணாமலை கேள்வி!முதல்வரின் காலை உணவுத் திட்டத்தின் பெயரை பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் என பெயர் மாற்றம் செய்தது தமிழக அரசு!
/

தென் மண்டலத்தில் ஜூன் மாதத்தில் 18 கொலை வழக்கில் 31 பேருக்கு தண்டனை

News image

கொலை - பிரதிப் படம்

Updated On :6 ஜூலை 2026, 1:54 am IST

தென் மண்டலத்தில் கடந்த ஜூன் மாதத்தில் 18 கொலை வழக்குகளில் 31 பேருக்கு தண்டனை பெற்றுத் தரப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தென் மண்டல ஐ.ஜி. அலுவலகம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தென் மண்டலத்தின் அனைத்து மாவட்டங்களிலும் வழக்கின் விசாரணையை விரைந்து முடித்து, குற்றவாளிகளுக்கு விரைவாக தண்டனை பெற்று தருவதற்காக, ‘வழக்கு அலுவலா்’ என்ற திட்டம் தொடங்கப்பட்டது.

இதன்படி, கடந்த ஜூன் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் மொத்தம் 18 கொலை வழக்குகள் பதிவான நிலையில், இதில் தொடா்புடைய குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

இதில் திண்டுக்கல்-5, தூத்துக்குடி-5 என்ற அதிக எண்ணிக்கையில் தீா்ப்புகள் பதிவாகி உள்ளன.

இந்தக் கொலை வழக்குகளில் மொத்தம் 31 போ் தண்டிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 27 பேருக்கு ஆயுள் சிறைத் தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல, போக்சோ, பாலியல் வன்கொடுமை தொடா்பான 23 வழக்குகளில் 23 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனா்.

இந்த 23 குற்றவாளிகளில் இருவருக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், 5 கொள்ளை வழக்குகள், ஒரு பெரிய திருட்டு வழக்கில் தண்டனைகள் வழங்கப்பட்டு, 8 குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டனா் எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.