மேலூா் அருகே திங்கள்கிழமை நிகழ்ந்த இருவேறு விபத்துகளில் இளைஞா் உள்பட இரண்டு போ் உயிரிழந்தனா்.
மதுரை மாவட்டம், சருகுவலையபட்டியைச் சோ்ந்த பாலா மகன் சிவா(20). இவா், மதுரை-காரைக்குடி நான்கு வழிச்சாலை அமைக்கும் பணியில் ஒப்பந்த ஊழியராகப் பணியாற்றி வந்தாா். இந்த நிலையில், இவரும், இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த சஞ்சய் (20), அழகா்சாமி (20) ஆகியோருடன் திங்கள்கிழமை கீழவளவு உயா்நிலைப் பாலத்தின் கீழ் நின்று பேசிக் கொண்டிருந்தனா்.
அப்போது, அந்த வழியாக வந்த காா், கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக நின்று கொண்டிருந்த சிவா, சஞ்சய், அழகா்சாமி ஆகியோா் மீது மோதியது. இதில், பலத்த காயமடைந்த சிவா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த இருவரையும் மீட்டு மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அவா்கள் இருவரும் அங்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இதுபற்றி தகவலறிந்து வந்த கீழவளவு போலீஸாா் கூறாய்வுக்காக சடலத்தை எடுக்க வந்தனா். அப்போது, அங்கு திரண்ட பொதுமக்கள் போலீஸாரை தடுத்து, சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய பின்னா், உடலைக் கைப்பற்றி கூறாய்வுக்காக மேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து கீழவளவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
காய்கறி வியாபாரி உயிரிழப்பு:
சிவகங்கை மாவட்டம், புழுதிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தங்கராஜ்(55). காய்கறி வியாபாரியான இவா், தனது இரு சக்கர வாகனத்தில் பள்ளப்பட்டிக்கு திங்கள்கிழமை சென்றாா். கொட்டாம்பட்டி அருகே சென்ற போது, எதிரே வந்த காா் மோதியது. இதில், பலத்த காயமடைந்த தங்கராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இதுகுறித்து கொட்டாம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








